கேரள உள்ளாட்சி தேர்தல்.. இடதுசாரி கூட்டணிக்கு மக்கள் ஆதரவு.. சில இடங்களில் மலர்ந்த தாமரை

கேரள உள்ளாட்சி தேர்தல்.. இடதுசாரி  கூட்டணிக்கு மக்கள் ஆதரவு.. சில இடங்களில் மலர்ந்த தாமரை

கேரள உள்ளாட்சி தேர்தலில் ஆளும் மார்க்சிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றது.

கேரளாவில் 6 மாநகராட்சிகள், 941 கிராம பஞ்சாயத்துக்கள், 14 மாவட்ட பஞ்சாயத்துக்கள் மற்றும் 87 நகராட்சிகள் உள்பட 1,200 உள்ளூர் சுயராஜ்ய அமைப்புகளில் உள்ள மொத்தம் 21,893 வார்டுகளுக்கு கடந்த டிசம்பர் 8,10 மற்றும் 14 ஆகிய தேதிகளில் மொத்தம் 3 கட்டமாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

கேரள உள்ளாட்சி தேர்தல்.. இடதுசாரி  கூட்டணிக்கு மக்கள் ஆதரவு.. சில இடங்களில் மலர்ந்த தாமரை
இடதுசாரி கூட்டணி

தங்கல் கடத்தல் விவகாரம் உள்ளாட்சி தேர்தலில் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதாவது கம்யூனிஸ்ட் கட்சிகளின் கூட்டணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ஆளும் மார்க்சிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றது. கேரளாவில் மொத்தமுள்ள 941 கிராம பஞ்சாயத்துக்களில் 514-லிலும், 152 ஒன்றிய பஞ்சாயத்துக்களில் 108-லிலும், 14 மாவட்ட பஞ்சாயத்துக்களில் பத்திலும், 87 நகராட்சிகளில் முப்பதைந்திலும், 6 மாநகராட்சிகளில் மூன்றிலும் இடதுசாரி கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

கேரள உள்ளாட்சி தேர்தல்.. இடதுசாரி  கூட்டணிக்கு மக்கள் ஆதரவு.. சில இடங்களில் மலர்ந்த தாமரை
பா.ஜ.க.

அதேசமயம் கேரளாவில் தற்போது விஸ்வரூபம் எடுத்தும் பா.ஜ.க. மொத்தம் 23 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இது கடந்த உள்ளாட்சி தேர்தலை காட்டிலும் அதிகமாகும். உள்ளாட்சி தேர்தல் வெற்றி கேரளாவில் பா.ஜ.க. காலுன்ற தொடங்கி விட்டது என்பதை வெளிப்படுத்துகிறது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கேரளா உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் 375 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.