75-வது சுதந்திர தினவிழா… பல்வேறு மாவட்டங்களில் தேசிய கொடியை ஏற்றி வைத்த ஆட்சியர்கள்!

 

75-வது சுதந்திர தினவிழா… பல்வேறு மாவட்டங்களில் தேசிய கொடியை ஏற்றி வைத்த ஆட்சியர்கள்!

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஆட்சியர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுகொண்டனர்.

திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடந்த சுதந்திர விழாவில் மாவட்ட ஆட்சியர் சிவராசு கலந்துகொண்டு, தேசிய கொடியை ஏற்றிவைத்தார். தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்ட அவர், 25 ஆண்டுகளாக சிறப்பான முறையில் பணியாற்றிய வருவாய், மருத்துவம், சுகாதாரம், காவல்துறை, தீயணைபுத்துறை உள்ளிட்ட துறைகளை சேர்ந்த 323 பேருக்கு பாராட்டி சான்றிதழ்களை வழஙகினார். இந்த நிகழ்ச்சியில் மத்திய மண்டல ஐ.ஜி பாலகிருஷ்ணன், திருச்சி மாவட்ட எஸ்.பி., மாநகர காவல் ஆணையர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடந்த சுதந்திர தின நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் முரளிதரன் கலந்துகொண்டு மூவர்ண கொடியை பறக்கவிட்டார். தொடர்ந்து, வானில் வண்ண பலூன்களை பறக்கவிட்ட ஆட்சியர், காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதைக்கு பின்னர் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார்.

கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்த சுதந்திர தின விழாவில், மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றிவைத்தார். இதில் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளும், தீ தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் செய்து காண்பிக்கப்பட்டன. இதேபோல் நாமக்கல் மாவட்டத்தில் நடந்த சுதந்திர தின நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றிவைத்தார். தொடர்ந்து பல்வேறு துறைகளை சார்ந்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் அவர் வழங்கினார்.

75-வது சுதந்திர தினவிழா… பல்வேறு மாவட்டங்களில் தேசிய கொடியை ஏற்றி வைத்த ஆட்சியர்கள்!

ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தேசியை கொடியை ஏற்றிவைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுகொண்டார். தொடர்ந்து, அரசின் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 124 அலுவலர்கள், 29 காவல்துறையினர் என 153 பேருக்கு பணி பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். மேலும், 25 பயனாளிகளுக்கு ரூ.9.10 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ராமநாதபுரம் சரக டிஐஜிமயில்வாகனன், எஸ்.பி. கார்த்திக் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

திருப்பூர் அரசு கலைக்கல்லூரியில் நடந்த சுதந்திர தின நிகழ்ச்சியில் ஆட்சியர் வினீத் தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுகொண்டஅவர், மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த 69 காவல்துறையினர், அரசு அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் 106 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். அத்துடன், அரசு துறைகளுக்கு ரூ.4.45 கோடிமதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட எஸ்.பி. சசாங் சாய், காவல் ஆணையர் வனிதா உள்ளிடோர் கலந்துகொண்டனர்.