கொரோனா வைரஸ் தாக்குதலில் ’தி ராக்’ குடும்பம்

 

கொரோனா வைரஸ் தாக்குதலில் ’தி ராக்’ குடும்பம்

கொரோனா வைரஸ் தொற்று விளையாட்டு வீரர்களை குறிவைத்து தாக்குவதைப் போல இருக்கிறது.

ஐபிஎல் விளையாடச் சென்றிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மின்னல் வீரர் உசேன் போல்ட் தனது கொரோனா தொற்று குறித்து சில நாட்களுக்கு முன் வீடியோ வெளியிட்டிருந்தார்.

கொரோனா வைரஸ் தாக்குதலில் ’தி ராக்’ குடும்பம்

பிரேசில் நாட்டு கால்பந்து விளையாட்டு வீரர் நெய்மருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த வரிசையில் சேர்ந்திருக்கிறார் மல்யுத்த வீரர் ராக்.

தி ராக் – WWE (World Wrestling Entertainment) என்றாலே பலருக்கு சட்டென்று நினைவுக்கு வரும் முகம். உடலெங்கும் டாட்டுக்களும் மிரட்டும் விழிகளும் கோபத்துடன் தாக்குவதும் கெட்ட கெட்ட வார்த்தைகளாகப் பேசுவதும் என ரசிகர்கள் எப்படியேனும் தன்னை நினைவில் வைத்துக்கொள்ள தயாரித்திருந்தார் ராக். தி ராக்கின் இயற்பெயர் ட்வைன் ஜான்சன்.

கொரோனா வைரஸ் தாக்குதலில் ’தி ராக்’ குடும்பம்

சில வாரங்களுக்கு முன் தான், தனது குட்டி மகளோடு பேசும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்திருந்தார் ராக். அந்த வீடியோ ரொம்ப க்யூட்டாக இருந்தது. அதனால், பதிவிட்ட சில மணிநேரத்தில் சோஷியல் மீடியாவில் வைரலானது.

தற்போது அந்த க்யூட் தேவதைக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்று செய்தி வெளியாகியுள்ளது. ராக், மனைவி மற்றும் அவர்களின் இரண்டு மகள் ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறதாம்.

இதுகுறித்து, அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கும் செய்தியில்,

கொரோனா வைரஸ் தாக்குதலில் ’தி ராக்’ குடும்பம்

நல்ல விதமாக நடந்துகொள்ளுங்கள். உங்களின் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்துக்கொள்ளுங்கள். முகக் கவசம் அணிந்துகொள்ளுங்கள். குடும்பத்தைப் பாதுகாப்பாக வைத்திருங்கல். நேர்மறையான சிந்தனைகளோடு இருங்கள். என்று அறிவுரை வழங்கியுள்ளார்.