நோய்ப் பரவலைத் தடுக்க கொரோனா டெஸ்ட் எடுக்கும் ரோபோ

 

நோய்ப் பரவலைத் தடுக்க கொரோனா டெஸ்ட் எடுக்கும் ரோபோ

கொரோனா பேரிடரில் உலகமே ஸ்தம்பித்து போயிள்ளது. நாள்தோறும் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 3 கோடியே 14 லட்சத்து  85 ஆயிரத்து 777 பேர்.    

கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 2 கோடியே 31 லட்சத்து 13 ஆயிரத்து 726 நபர்கள்.

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 9 லட்சத்து 69 ஆயிரத்து 301 பேர்.  இறப்போர் சதவிகிதம் குறைந்துகொண்டே வந்தாலும் புதிய நோயாளிகளும் அதிகரித்து வருகிறார்கள். 

  

நோய்ப் பரவலைத் தடுக்க கொரோனா டெஸ்ட் எடுக்கும் ரோபோ
கொரோனா வைரஸ்

கொரோனா மரணங்களில் முன்கள வீரர்களும் அடக்கம். குறிப்பாக, மருத்துவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் பரிசோதனையின்போது அவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்படுவது வழக்கமாகி வருகிறது.

இதற்கு ஒரு தீர்வை சிங்கப்பூர் நாடு ஏற்படுத்தி உள்ளது. சிங்கப்பூர் தேசிய புற்றுநோய் மையமும், அந்நாட்டின் பொது மருத்துமனையும் சேர்ந்து புதிய ரோபாவைக் கண்டறிந்துள்ளன.

நோய்ப் பரவலைத் தடுக்க கொரோனா டெஸ்ட் எடுக்கும் ரோபோ

கொரோனா நோயாளிகளின் மூக்கின் உள்ளே, தொண்டை பகுதியில் உள்ள பரிசோதனைக்குரிய மாதிரியை எடுக்கும் விதமாக இந்த ரோபா தயாரிக்கப்பட்டுள்ளதாம். இந்த ரோபாவுக்கு ஸ்வாப்போட் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அதிகம் பரவ வாய்ப்புள்ள வைரஸ் தொற்று சோதனைகளில் இதுபோன்ற ரோபாக்களைப் பயன்படுத்துகையில் முன்கள பணியாளர்களுக்கு நோய்த் தொற்றுவது பெருமளவு குறையும் எனக் கணிக்கப்படுகிறது.