`அடுக்குமாடி குடியிருப்பில் புகுந்தான்; இன்வெர்ட்டரை ஆட்டையப் போட்டான்’-சிசிடிவியில் பதிவான காட்சிகள்

 

`அடுக்குமாடி குடியிருப்பில் புகுந்தான்; இன்வெர்ட்டரை ஆட்டையப் போட்டான்’-சிசிடிவியில் பதிவான காட்சிகள்

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் புகுந்த கொள்ளையன், ஒருவர் வீட்டில் இருந்த இன்வெர்ட்டரை திருடிச் செல்லும் வீடியோ காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இந்த கொள்ளையனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

சென்னை வேளச்சேரி ஏஜிஎஸ் காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் செல்வக்குமார். அவர் குடியிருக்கும் அடுக்குமாடி வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர், அவரது வீட்டிற்கு ஓரமாகப் பொருத்தப்பட்டிருந்த இன்வெர்ட்டர் திருடிச் சென்றுள்ளார்.

காலை எழுந்து பார்த்தபோது இன்வெர்ட்டர் காணாமல் போய் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வகுமார், வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து, அடுக்குமாடிக் குடியிருப்பில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர் காவல்துறையினர். அப்போது, கொள்ளையன் பைக்கில் வந்து குடியிருப்புப் பகுதியில் நுழையும்போது நாய் ஒன்று குரைக்கிறது. இந்த நாயை கல்லால் தாக்கிய கொள்ளையன், பின்னர் தன்னுடைய கைவரிசை காட்டியுள்ளது சிசிடிவி காட்சியில் தெரியவந்தது. இதையடுத்து, இன்வெர்ட்டரை திருடிச் சென்ற கொள்ளையனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

`அடுக்குமாடி குடியிருப்பில் புகுந்தான்; இன்வெர்ட்டரை ஆட்டையப் போட்டான்’-சிசிடிவியில் பதிவான காட்சிகள்

இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், “கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி பல இடங்களில் கொள்ளையர்கள் தங்கள் கைவரிசைகளை காட்டி வருகின்றனர். இதனால், ஒவ்வொரு கடைகளிலும், அடுக்குமாடி குடியிருப்புகளிலும், தனிப்பட்ட வீடுகளில் சிசிடிவி கேமராவை பொருத்தும்படி பொதுமக்கள், வியாபாரிகளை கேட்டுக் கொள்கிறோம். ஆட்கள் இல்லாத வீட்டை பார்த்து நோட்டமிடும் இப்படிப்பட்ட கொள்ளையர்கள் இசியாக தங்கள் கொள்ளை சம்பவத்தை அரகேற்றி சென்று விடுகின்றனர். இதேபோல் இன்வெர்ட்டரை கொள்ளையன் திருடிச் சென்றுள்ளான். விரைவில் கொள்ளையனை பிடித்துவிடுவோம்” என்று முடித்துக் கொண்டனர்.