Home இந்தியா டிவிட்டரில் 10 லட்சம் பாலோயர்களுடன் கலக்கும் இந்திய ரிசர்வ் வங்கி.... உலக அளவில் பிரபலமான மத்திய வங்கி....

டிவிட்டரில் 10 லட்சம் பாலோயர்களுடன் கலக்கும் இந்திய ரிசர்வ் வங்கி…. உலக அளவில் பிரபலமான மத்திய வங்கி….

சர்வதேச அளவில் டிவிட்டரில் மிகவும் பிரபலமான வங்கியாக இந்திய ரிசர்வ் வங்கி உள்ளது. 10 லட்சம் பாலோயர்களுடன் ஆர்.பி.ஐ. முதல் இடத்தில் உள்ளது.

இந்திய ரிசர்வ வங்கி (ஆர்.பி.ஐ.) 2012ம் ஆண்டில் டிவிட்டரில் கணக்கை தொடங்கியது. ஆர்.பி.ஐ.க்கு டிவிட்டரில் @RBI, @RBIsays என்ற 2 கணக்குகள் உள்ளன. முதல் டிவிட்டர் கணக்கு (@RBI) முக்கிய கொள்கை முடிவுகளை வெளியிட பயன்படுத்தப்படுகிறது. இரண்டாவது கணக்கு (@RBIsays) பொது விழிப்புணர்வு நடவடிக்கைக்காக பயன்படுத்தப்படுகிறது.

சக்திகந்த தாஸ்

கடந்த ஏப்ரல் மாதம் டிவிட்டரில் இந்திய ரிசர்வ் வங்கி கணக்கை பின்தொடருபவர்களின் எண்ணிக்கை 7.50 லட்சத்தை தொட்டது. நேற்று டிவிட்டரில் இந்திய ரிசர்வ் வங்கியை பின்தொடருபவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை தொட்டது. இந்த தகவலை ஆர்.பி.ஐ. கவர்னர் சக்திகந்த தாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் அவர், ஆர்.பி.ஐ. டிவிட்டர் கணக்கு இன்று 10 லட்சம் பாலோயர்ஸை தொட்டது. ஒரு புதிய மைல்கல். ரிசர்வ் வங்கியில் உள்ள எனது சக ஊழியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்று பதிவு செய்து இருந்தார்.

இந்திய ரிசர்வ் வங்கி டிவிட்டர் கணக்கு

டிவிட்டரில் பாலோயர்கள் அடிப்படையில் உலக நாடுகளின் மத்திய வங்கிகளில் இந்திய ரிசர்வ் வங்கி முதலிடத்தில் உள்ளது. டிவிட்டரில் இந்திய ரிசர்வ் வங்கி கணக்கை 10 லட்சம் பேர் பின் தொடருகின்றனர். மற்ற நாடுகளின் மத்திய ரிசர்வ் வங்கிகள் இந்திய ரிசர்வ் வங்கியை காட்டிலும் மிகவும் பின்தங்கி உள்ளன. இந்திய ரிசர்வ் வங்கிக்கு அடுத்தப்படியாக மெக்சிகோவின் பான்கோ டி மெக்சிகோ 7.74 லட்சம் பாலோயர்களுடன் உள்ளது. மூன்றாவது இடத்தில் இந்தோனேஷியாவின் மத்திய வங்கி 7.57 லட்சம் பாலோயர்களுடன் உள்ளது.

மாவட்ட செய்திகள்

Most Popular

மருத்துவ உள் இடஒதுக்கீட்டை எதிர்க்கும் மத்திய பாஜக அரசு – தமிழக பாஜக நிலை என்ன?

இந்தியா முழுமைக்கும் மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வு நீட் தேர்வைக் கொண்டு வந்தது மத்திய அரசு. இது காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும்போது கொண்டுவரப்பட்டாலும் சில மாநிலங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. ஆனால்,...

டிராக்டர் திருட்டு – போலீஸ் விசாரணைக்கு பயந்து தொழிலாளி தற்கொலை

திருச்சி சிறுகனூர் அருகே டிராக்டர் திருட்டு வழக்கில் தேடப்பட்ட இளைஞர் போலீஸ் விசாரணைக்கு பயந்து விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார்.

பத்து நாட்களாக பாமகவை படுத்தி எடுக்கும் திமுக

பத்து நாட்களாக திமுக படுத்தி எடுத்தும் பாமக பதில் சொல்லாமல் இருக்கிறது. திமுகவும் விடுவதாக இல்லை போலிருக்கிறது. அதிமுகவுடன் பாமக கூட்டணியை இறுதி செய்துவிட்டது. ஆனால்,...

‘உள்ஒதுக்கீடு நீட் தேர்வின் தகுதியை நீர்த்துபோகச் செய்யும்’ – மத்திய அரசு!

புதுச்சேரியில் மருத்துவ படிப்பிற்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் முதன் முறையாக அரசு பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவ படிப்பில்...
Do NOT follow this link or you will be banned from the site!