தப்பு செய்தா தண்டனை உண்டு…. சிட்டிபேங்குக்கு ரூ.4 கோடி அபராதம் விதித்த இந்திய ரிசர்வ் வங்கி…

தப்பு செய்தா தண்டனை உண்டு…. சிட்டிபேங்குக்கு ரூ.4 கோடி அபராதம் விதித்த இந்திய ரிசர்வ் வங்கி…

நம் நாட்டின் மைய வங்கியான இந்திய ரிசர்வ் வங்கிதான் வங்கிகளுக்கு எல்லாம் பாஸ். ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளுக்கு உட்பட்டு மற்றும் அனுமதியோடுதான் இங்கு எந்தவொரு நிதி நிறுவனங்களையும் யாராலயும் நடத்த முடியும். ரிசர்வ் வங்கி வங்கிகளின் செயல்பாடுகளை கண்காணிக்கும். வங்கிகள் தவறு செய்தால் அபராதமும் விதிக்கும். இதனால் வங்கிகள் மிகவும் பொறுப்புடன் செயல்படும்.

தப்பு செய்தா தண்டனை உண்டு…. சிட்டிபேங்குக்கு ரூ.4 கோடி அபராதம் விதித்த இந்திய ரிசர்வ் வங்கி…

ஆனாலும், சில நேரங்களில் சில வங்கிகள் விதிமுறைகளை மீறி செயல்பட்டு ரிசர்வ் வங்கியிடம் மாட்டி விடுகின்றன. ரிசர்வ் வங்கியும் இதை தான் எதிர்பார்த்தேன் என்று ஒரு தொகையை அபராதமாக அந்த வங்கிகளிடம் இருந்து கறந்து விடுகிறது. ரிசர்வ் வங்கி தொடர்ந்து வங்கிகளின் நடவடிக்கையை கண்காணிப்பதால்தான் அதில் பணத்தை போட்ட வாடிக்கையாளர்களால் நிம்மதியாக தூங்க முடிகிறது.

தப்பு செய்தா தண்டனை உண்டு…. சிட்டிபேங்குக்கு ரூ.4 கோடி அபராதம் விதித்த இந்திய ரிசர்வ் வங்கி…

இந்நிலையில், வங்கி ஒழுங்குமுறைச் சட்டத்தின் சில பிரிவுகளின் மீறல் மற்றும் ரிசர்வ் வங்கியின் உத்தரவுகளுக்கு இணங்காதது போன்ற காரணங்களுக்காக சிட்டி பேங்குக்கு ரிசர்வ் வங்கி ரூ.4 கோடி அபராதம் விதித்துள்ளது. இதுதவிர, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள பல்வேறு உத்தரவுகளுக்கு இணக்கமாக செயல்படாத பாரத் கூட்டுறவு வங்கி (ரூ.60 லட்சம்), நாகர் நகர்புற கூட்டுறவு வங்கி (ரூ.40 லட்சம்) மற்றும் டி.ஜே.எஸ்.பி. ஷாஹகரி வங்கி (ரூ.45 லட்சம்) ஆகிய 3 கூட்டுறவு வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி அபராதம் விதித்துள்ளது.