`ரிப்போர்ட்; முதல்வரின் ஆர்டர்’ – சாத்தான்குளம் சம்பவத்தில் சிபிசிஐடி போலீஸாரின் ஆக்ஷனுக்கு என்ன காரணம்?

 

`ரிப்போர்ட்; முதல்வரின் ஆர்டர்’ – சாத்தான்குளம் சம்பவத்தில் சிபிசிஐடி போலீஸாரின் ஆக்ஷனுக்கு என்ன காரணம்?

சாத்தான்குளம் சம்பவத்தில் சிபிஐ விசாரணை நடத்த அரசு உத்தரவிட்ட நிலையில் இந்த வழக்கை கையில் எடுத்த சிபிசிஐடி போலீசார், முன்னாள் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ-க்கள், காவலர்கள் என 5 பேரை அடுத்தடுத்து கைது செய்துள்ளனர்.

சாத்தான்குளம் சம்பவம்

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்டைப் பார்த்து ஆளுங்கட்சி ஒரு தருணம் ஷாக்காகி போய்விட்டதாம். வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணத்தில் மறைமுக அரசியல் நடந்துவருவதாகவும் அதன்எதிரொலி அதிமுககவின் வாக்குவங்கி பாதிக்கப்படும் எனவும் உளவுத்துறை ரிப்போரட் ஒன்றை சில நாள்களுக்கு முன் முதல்வரின் பார்வைக்கு கொண்டு சென்றுள்ளது. ஏற்கெனவே திமுக, சாத்தான்குளம் சம்பவத்தை கையில் எடுத்து ஆளுங்கட்சியை கடுமையாக விமர்சித்து வந்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்க என்ன செய்யலாம் என காவல்துறையினருடன் அவசர மீட்டிங் நடத்தப்பட்டுள்ளது. அதில் கலந்து கொண்ட, தென்மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்களும் கட்சியின் மூத்த நிர்வாகிகளும் சாத்தான்குளம் சம்பவத்தில் காவல்துறையினருக்கு எதிரான ஆவணங்கள், ஆதாரங்கள் நாள்தோறும் வெளியாகிவருகிறது. சிபிஐ விசாரித்தால் கண்டிப்பாக சம்பந்தப்பட்ட காவல்துறையினர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது. அதனால் அதற்கு முன்பே சிபிசிஐடி போலீஸார் மூலும் நாமே சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ-க்கள், காவலர்களை கைது செய்துவிடலாம் என தங்களின் கருத்துக்களை கூறியுள்ளனர்.

`ரிப்போர்ட்; முதல்வரின் ஆர்டர்’ – சாத்தான்குளம் சம்பவத்தில் சிபிசிஐடி போலீஸாரின் ஆக்ஷனுக்கு என்ன காரணம்?

ஆளுங்கட்சியின் சிக்னல்

இதையடுத்து காவல்துறையினர், சட்டநிபுணர்களுடன் ஆலோசித்தப்பிறகு சாத்தான்குளம் சம்பவத்தில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ-க்கள், காவலர்களின் சர்வீஸ் ஃபைல்களை ஆய்வு செய்துள்ளனர். அப்போது இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ-க்களின் ஃபைல்களில் உள்ள தகவல்களைப் பார்த்ததும் உடனடியாக நடவடிக்கை எடுக்க முதல்வர் தரப்பிலிருந்து க்ரீன் சிக்னல் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்பிறகே சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், சாத்தான்குளம் சம்பவத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று பேட்டியளித்தார். அதோடு ஆளுங்கட்சியினரும் அதே கருத்தை முன்மொழிந்தனர். உடனடியாக பாதிக்கப்பட்ட ஜெயராஜ் குடும்பத்தினரிடம் ஆளுங்கட்சி தரப்பிலிருந்து இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதோடு அமைச்சர் கடம்பூர் ராஜூ உங்களைச் சந்திக்க வரும் தகவல் கூறப்பட்டதும் ஜெயராஜ் குடும்பத்தினரும் ஓகே என்று கூறியுள்ளனர்.

`ரிப்போர்ட்; முதல்வரின் ஆர்டர்’ – சாத்தான்குளம் சம்பவத்தில் சிபிசிஐடி போலீஸாரின் ஆக்ஷனுக்கு என்ன காரணம்?

சிபிசிஐடியின் ஆக்ஷன்

அ.தி.மு.க.- அறிவித்த 25 லட்சம் ரூபாய்க்கான காசோலையுடன் அமைச்சர், ஆளுங்கட்சி நிர்வாகிகள் ஜெயராஜின் வீட்டிற்கு சென்று ஆறுதல், இரங்கலைத் தெரிவித்தனர். அப்போது விரைவில் உங்களை முதல்வர் சந்திப்பார் என்றும் சொல்லிவிட்டு வந்துள்ளனர். இதற்கிடையில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வழக்கு வருவதற்குள் அதிரடி ஆக்ஷனில் ஈடுபட சிபிசிஐடி போலீசாருக்கு மேலிடத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனால் சென்னையிலிருந்து சிபிசிஐடி பட்டாளம், தூத்துக்குடி நெல்லை மாவட்ட போலீசார் சாத்தான்குளத்தில் முகாமிட்டனர். 12 குழுக்களாகப்பிரிந்து சென்று சிபிசிஐடி போலீசார், காவல் நிலையம், ஜெயராஜின் கடை, வீடு, அவரின் குடும்பத்தினர், சிறைக்கு அழைத்துச் சென்ற கார் டிரைவர், சாட்சியம் அளித்த காவலர் ரேவதி ஆகியோரிடம் விசாரணை நடத்தி கொலை வழக்கு பதிவு செய்வதற்கான முகாந்திர தகவல்களை சேகரித்தனர்.

`ரிப்போர்ட்; முதல்வரின் ஆர்டர்’ – சாத்தான்குளம் சம்பவத்தில் சிபிசிஐடி போலீஸாரின் ஆக்ஷனுக்கு என்ன காரணம்?

சாத்தான்குளம் போலீசார் பதிவு செய்திருந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் மீதான எப்ஐஆரை திருத்தம் செய்து கொலை வழக்காக மாற்றினர். ஏற்கெனவே கோவில்பட்டி மாஜிஸ்திரேட்டின் விசாரணை அறிக்கை அடிப்படையிலும் சிபிசிஐடி போலீசார் அதிரடி ஆக்ஷனுக்கு தயாராகினர். வழக்கில் தொடர்புடைய இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ-க்கள், காவலர்கள் எங்கிருக்கிறார்கள் என்ற விவரங்களை ரகசியமாக சேகரித்து வைத்திருந்தனர். ஒவ்வொருவரையும் சிபிசிஐடி போலீஸ் டீம் பிடித்து தூத்துக்குடிக்கு அழைத்து வந்தது. ஒவ்வொருவரிடமும் ஜெயராஜ், பென்னிக்ஸ் விசாரணையின் போது என்ன நடந்தது என்று தங்கள் ஸ்டைலில் விசாரித்தனர். அப்போது முரண்டு பிடித்தவர்களிடம் நீங்களும் போலீஸ்தான், அதனால் உங்களிடமிருந்து எப்படி உண்மையை வர வைக்கணும் என்று எங்களுக்கு தெரியும். இந்த வழக்கிலிருந்து நீங்கள் யாரும் தப்பிக்க முடியாது என்று உண்மையை போட்டுடைத்தார் சிபிசிஐடியின் மூத்த அதிகாரி ஒருவர். அதன்பிறகுதான் சாத்தான்குளம் சம்பவத்தில் தொடர்புடைய காவலர்கள் ஒவ்வொவரும் சம்பவத்தன்று என்ன நடந்தது என்பதை வாக்குமூலமாக கூறினர்.

இன்ஸ்பெக்டர் முதல் காவலர்கள் வரை

ஒவ்வொருவரிடமும் வாக்குமூலத்தை பெற்ற சிபிசிஐடி போலீஸார் முதலில் எஸ்.ஐ ரகுகணேஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்தத் தகவல் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் முன்னாள் இன்ஸ்பெக்டரும், குற்றச்சாட்டில் சிக்கியவருமான ஸ்ரீதருக்கு தகவல் சென்றது. உடனே அவர், காரில், தேனிக்கு சென்றுவிடலாம் என்று கருதி புறப்பட்டார். அவரைப் பிடிக்க காத்திருந்த போலீசாருக்கு, சிபிசிஐடி தலைமையிலிருந்து சிக்னல் சென்றதும் நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் செக் போஸ்ட்டில் வைத்து மடக்கி தூத்துக்குடிக்கு அழைத்துச் சென்றனர். காரில் வரும்போதே ஸ்ரீதரிடம் விசாரித்த போலீஸ் டீம், அவரிடமும் வாக்குமூலம் பெற்று நீதிமன்றத்தில் சிறையில் அடைத்துள்ளனர். இந்த வழக்கில் இதுவரை 5 பேரை அடுத்தடுத்து போலீசார் கைது செய்த தகவல் ஜெயராஜ் குடும்பத்தினருக்கும் நீதி கேட்டு போராட்டம் நடத்தியவருக்கும் தெரிந்ததும் சாத்தான்குளம் அருகில் உள்ள நெடுங்குளம் கிராம மக்கள் நள்ளிரவிலேயே பட்டாசுக்களை வெடித்தனர். ஜெயராஜின் மகள் பெர்சி அளித்த பேட்டியில் முதல்வருக்கும் தங்களுக்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கும் நன்றி என்று கூறினார்.

`ரிப்போர்ட்; முதல்வரின் ஆர்டர்’ – சாத்தான்குளம் சம்பவத்தில் சிபிசிஐடி போலீஸாரின் ஆக்ஷனுக்கு என்ன காரணம்?

ஒவ்வொரு தகவல்களையும் உளவுத்துறை உடனுக்குடன் முதல்வர் அலுவலகத்துக்கு தெரிவித்துக் கொண்டே இருந்தது. சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை கையில் எடுத்த 24 மணி நேரத்துக்குள் சாத்தான்குளம் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிபிசிஐடி போலீசாரின் இந்த அதிரடிக்கு நீதிமன்றமே பாராட்டுக்களை தெரிவித்துள்ளது. ஜெயராஜ் குடும்பத்தினரும் எதிர்கட்சியினர் முன்வைத்த கொலை வழக்கு சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனால் அதற்குரிய ஆவணங்களையும் ஆதாரங்களையும் சிபிசிஐடி போலீசார் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

காவலர் ரேவதி

இந்த வழக்கில் தைரியமாக சாட்சி கூறிய சாத்தான்குளம் பெண் காவலர், அளித்த தகவலில் தனக்கு மிரட்டல்கள் வருவதாகவும் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாவும் தெரிவித்தார். மேலும் சாட்சி கூறிய பிறகு மனஉளைச்சலில் இருப்பதாகவும் கூறினார். இதையடுத்து அவருக்குரிய பாதுகாப்பை அளிக்கும்படியும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கவும் நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்தது. இதற்கிடையில் தென்மண்டல ஐஜியாக பொறுப்பேற்ற முருகன், உடனடியாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினரிடம் பேசி, ரேவதியின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்தார்.

`ரிப்போர்ட்; முதல்வரின் ஆர்டர்’ – சாத்தான்குளம் சம்பவத்தில் சிபிசிஐடி போலீஸாரின் ஆக்ஷனுக்கு என்ன காரணம்?

ஐஜி முருகன் அளித்த பேட்டியில் `ப்ரெண்ட்ஸ் ஆப் போலீசார் அதிகாரத்தை கையில் எடுக்க சட்டத்தில் இடமில்லை’ என்று ஒரு வார்த்தைக் கூறினார். ஏனெனில் சாத்தான்குளம் சம்பவத்தில் ப்ரெண்ட்ஸ்ஆப் போலீசார் பேசிய ஆடியோ இந்த வழக்கில் முக்கிய ஆதாரமாக உள்ளது. அதனால்தான் ஜெயராஜ், பென்னிக்ஸை விசாரணை என்ற பெயரில் அத்துமீறி நடந்தவர்கள் மீதும் நடவடிக்கை பாய உள்ளது. அடுத்து ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் சிறையில் அடைக்க உடல் நலத்துடன் இருப்பதாக சான்றிதழ் அளித்த மருத்துவரிடம் விசாரணை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், சம்பந்தப்பட்ட மருத்துவர் தொடர் விடுமுறையில் இருந்துவருகிறார். அதனால் அவரிடம் விசாரணை நடத்துவது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் ஆலோசித்துவருகின்றனர். ஏற்கெனவே கோவில்பட்டி அரசு மருத்துவர் அளித்த தகவல், சிசிடிவி காட்சிகள் அனைத்தும் சாத்தான்குளம் காவல்துறையினருக்கு எதிராகவே உள்ளதால் சிபிஐ வருவதற்கு முன் சிபிசிஐடி போலீசாரே அனைத்து பணிகளையும் செவ்வனவே முடித்துவிடுவார்கள் போல!

-நமது நிருபர்