வெறுமனே சொல்வதால் மட்டும் யாரும் பலசாலியாக மாட்டார்கள்…. மத்திய அரசை தாக்கிய ராஷ்டிரிய ஜனதா தளம்

 

வெறுமனே சொல்வதால் மட்டும் யாரும் பலசாலியாக மாட்டார்கள்…. மத்திய அரசை தாக்கிய ராஷ்டிரிய ஜனதா தளம்

இந்திய-சீன எல்லை மோதல் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு வெளிப்படை தன்மையை பராமரிக்கவில்லை மற்றும் எல்லையிலிருந்து முக்கிய தகவல்களை வெளியிடுவதற்கு பதிலாக போதுமானதாக இல்லாத மற்றும் பயனற்ற தகவல்களை தருகிறது என காங்கிரஸ் கடுமையாக குற்றச்சாட்டியது. காங்கிரசை தொடர்ந்து ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.

வெறுமனே சொல்வதால் மட்டும் யாரும் பலசாலியாக மாட்டார்கள்…. மத்திய அரசை தாக்கிய ராஷ்டிரிய ஜனதா தளம்

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த இந்தியா-சீனா மோதல் தொடர்பாக, வெறுமனே சொல்வதால் யாரும் பலசாலியாக மாட்டார்கள் என மத்திய அரசை ராஷ்டிரிய ஜனதா கட்சி கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. முன்னதாக அந்த கட்சியின் தலைவர் தேஜஷ்வி யாதவ் பேட்டி ஒன்றில், இந்தியா-சீனா பதற்றம் குறித்து ஆலோசனை செய்ய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி புறக்கணிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் 80 சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் மாநிலங்களவையைில் 5 எம்.பி.க்களை வைத்துள்ளபோதிலும் என்னுடைய பெரிய கட்சி தவிர்க்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

வெறுமனே சொல்வதால் மட்டும் யாரும் பலசாலியாக மாட்டார்கள்…. மத்திய அரசை தாக்கிய ராஷ்டிரிய ஜனதா தளம்கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்கள் இடையிலான மோதலில் இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், வீரர்களின் உயிர் தியாகம் வீண் போகாது. இந்தியா அமைதியை விரும்புகிறது ஆனால் யாரும் சீண்டினால் தக்க பதிலடி கொடுக்கும் என சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்தார்.