கர்நாடகா, மத்திய பிரதேசம் போன்று ராஜஸ்தான் அரசையும் சீர்குலைக்க முயற்சிகள் நடக்குது… காங்கிரஸ் போலீசில் புகார்…

கர்நாடகா, மத்திய பிரதேசம் போன்று ராஜஸ்தான் அரசையும் சீர்குலைக்க முயற்சிகள் நடக்குது… காங்கிரஸ் போலீசில் புகார்…

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. 200 உறுப்பினர்கள் கொண்ட அம்மாநில சட்டப்பேரவையில் காங்கிரஸ் 107 எம்.எல்.ஏ.களுடன் பெரும்பான்மை பலத்துடன் உள்ளது. இதனால் காங்கிரஸ் ஆட்சியை அம்மாநிலத்தில் கவிழ்ப்பது கடினம். இந்த சூழ்நிலையில், ராஜஸ்தான் சட்டமன்றத்தின் தலைமை கொறடா மகேஷ் ஜோஷி, முதல்வர் அசோக் கெலாட் அழைத்துள்ள கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஜெய்ப்பூரில் உள்ள ரிசார்ட்டுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ள நிலையிலும், ராஜஸ்தான் அரசாங்கத்தை சீர்குலைப்பதற்கான முயற்சிகள் நடப்பதாக போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

கர்நாடகா, மத்திய பிரதேசம் போன்று ராஜஸ்தான் அரசையும் சீர்குலைக்க முயற்சிகள் நடக்குது… காங்கிரஸ் போலீசில் புகார்…

மகேஷ் ஜோஷி, ராஜஸ்தான் காவல்துறையின் ஊழல் தடுப்பு பிரிவு (ஏ.சி.பி.) டி.ஜி.க்கு அனுப்பிய எழுத்துப்பூர்வமான கடிதத்தில் கூறியிருப்பதாவது: காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், அரசாங்கத்துக்கு ஆதரவு அளிக்கும் எம்.எல்.ஏ.க்களை தங்களது பக்கம் இழுக்க சிலர் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். ஊழல் நடத்தைக்கான அடையாளம் காணப்பட்ட நபர்கள் மற்றும் அரசாங்கத்தை ஸ்திரமின்மைக்கு உட்படுத்தும் முயற்சிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கர்நாடகா, மத்திய பிரதேசம் போன்று ராஜஸ்தான் அரசையும் சீர்குலைக்க முயற்சிகள் நடக்குது… காங்கிரஸ் போலீசில் புகார்…

கர்நாடகா, மத்திய பிரதேசத்தை போலவே ராஜஸ்தானிலும் அரசாங்கத்தை ஸ்திரமின்மைக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என எனக்கு தகவல் வந்துள்ளது என அதில் தெரிவித்துள்ளார். அதேசமயம் அந்த புகாரில் இந்த நடவடிக்கையில் யார் ஈடுபடுகிறார்கள் என்பதை அவர் குறிப்பிடவில்லை. ஏ.சி.பி. டி.ஜி. திரிபாதி இது குறித்து கூறுகையில், நாங்கள் புகாரை பெற்றுள்ளோம். இது குறித்து விசாரணை நடத்தப்படும். தகுநத நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.