ஜனவரி 10ம் தேதி வரை மழை தொடரும் : முக்கியத் தகவல் இதோ!

 

ஜனவரி 10ம் தேதி வரை மழை தொடரும் : முக்கியத் தகவல் இதோ!

சென்னை நுங்கம்பாக்கத்தில் வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது , அடுத்த 24 மணி நேரத்தில் திருப்பூர், நாமக்கல், கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கடலோர மற்றும் தென் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜனவரி 10ம் தேதி வரை மழை தொடரும் : முக்கியத் தகவல் இதோ!

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், குறைந்தபட்சம் 24 டிகிரி வெப்பநிலை பதிவாகும் என்றும் நாளை பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து, அதிகபட்சமாக கொள்ளிடத்தில் செ.மீ மழை பதிவாகி இருப்பதாகவும் குறைந்தபட்சமாக கடலூர், பாண்டிச்சேரியில் 4 செ.மீ மழை பதிவாகி இருப்பதாகவும் புவியரசன் தெரிவித்தார்.

ஜனவரி 10ம் தேதி வரை மழை தொடரும் : முக்கியத் தகவல் இதோ!

மேலும், குமரிக் கடல் பகுதியில் மணிக்கு 40 – 50 கி.மீ வேகத்தில் காற்று வீசுவதால் கடலுக்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் வழக்கமாக பெய்யும் மழையை விட இந்த ஆண்டு 4% அதிக மழை பெய்துள்ளது என்றும் பருவமழை வரும் ஜன.10ம் தேதி வரை இருக்கும் என்றும் கூறினார்.