“பொதுமக்கள் பதற்றமடைந்து மருத்துவமனைகளில் குவிய வேண்டாம்” : சுகாதாரத்துறை வேண்டுகோள்

 

“பொதுமக்கள் பதற்றமடைந்து மருத்துவமனைகளில் குவிய வேண்டாம்”   : சுகாதாரத்துறை வேண்டுகோள்

பொதுமக்கள் பதற்றமடைந்து மருத்துவமனைகளில் குவிய வேண்டாம் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா நாளுக்கு நாள் உச்சத்தை தொட்டு வருகிறது. நேற்று ஒரேநாளில் தொற்று பாதிப்பு 13 ஆயிரத்தை கடந்தது. கொரோனா இரண்டாவது அலையின் தாக்கமாக நேற்று 13776 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 78 பேர் சிகிச்சை பலனின்றி கொரோனாவால் பலியானார்கள். இதன் மூலம் மொத்த உயிரிழப்பு 13,395 ஆக உயர்ந்துள்ளது.கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக கடந்த 20 ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், இன்று இரவு 10 மணிமுதல் 4 மணிவரை இரவு நேர ஊரடங்கும், அதை தொடர்ந்து ஞாயிற்று கிழமைகளில் முழு நேர ஊரடங்கு என மொத்தம் 30 மணிநேர ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது.

“பொதுமக்கள் பதற்றமடைந்து மருத்துவமனைகளில் குவிய வேண்டாம்”   : சுகாதாரத்துறை வேண்டுகோள்

இந்நிலையில் சென்னையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், “பொதுமக்கள் பதற்றமடைந்து மருத்துவமனைகளில் குவிய வேண்டாம். பாதிக்கப்பட்டவர்கள் தாங்களாகவே ரெம்டெசிவர் மருந்துகளை வாங்கிப் போட்டுக் கொள்ளக்கூடாது. பாதிக்கப்பட்ட எல்லோருக்கும் ரெம்டெசிவர் மருந்து தேவைப்படுவதில்லை. தமிழகம் சவாலான காலகட்டத்தில் உள்ளது. எனவே பொதுமக்கள் பதற்றமடைய கூடாது. சென்னையில் 12 ஸ்கிரீனிங் சென்டர் உள்ளது .அங்கு பொதுமக்கள் சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பொதுமக்கள் காய்ச்சல் கண்காணிப்பு மையத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் புதிதாக 360 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்; கூடுதலாக 2400 ஆக்சிஜன் வசதியுள்ள படுக்கைகள் ஏற்படுத்தப்படும்; கோவிட் கவனிப்பு மையங்களில் 9503 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன ” என்றார்.