சிறையில் தற்கொலைக்கு முயன்ற நளினி நலமாக இருப்பதாக மருத்துவர் சான்று!

சிறையில் தற்கொலைக்கு முயன்ற நளினி நலமாக இருப்பதாக மருத்துவர் சான்று!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி பேரறிவாளன், ராபர்ட் பயஸ், நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டு வேலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் நளினி வேலூர் பெண்கள் சிறையிலும், அவரது கணவன் முருகன் ஆண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். 28 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் நளினியும் முருகனும் தங்களை விடுவிக்கக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

சிறையில் தற்கொலைக்கு முயன்ற நளினி நலமாக இருப்பதாக மருத்துவர் சான்று!

அண்மையில் நளினியை பேசவும், பார்க்கவும் அனுமதிக்கோரி சிறையில் முருகன் உண்ணாவிரதம் இருந்தார். இதனிடையே ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் மகளிர் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதி நளினி தற்கொலை முயற்சி செய்துள்ளார். சக கைதியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் காவலர் ஒருவர் தலையிட்டதால் அவர் தற்கொலை முயற்சி செய்ததாக தெரிகிறது.

சிறையில் தற்கொலைக்கு முயன்ற நளினி நலமாக இருப்பதாக மருத்துவர் சான்று!

இந்நிலையில் நளினி நலமுடன் உள்ளதாக சிறை மருத்துவர் அவர் உடல்நிலை குறித்து சான்றிதழ் அளித்துள்ளார். அவரின் கழுத்தில் காயம் ஏதுமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக வேலூர் பெண்கள் தனிச்சிறையில் உள்ள தனது மகள் நளினியை புழல் சிறைக்கு மாற்றக்கோரி சிறை துறை டிஜிபிக்கு நளினியின் தாயார் பத்மா கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.