“கோவையில் கொரோனாவை கட்டுப்படுத்துவதே முதன்மை பணி” – மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுங்கரா உறுதி!

 

“கோவையில் கொரோனாவை கட்டுப்படுத்துவதே முதன்மை பணி” – மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுங்கரா உறுதி!

கோவை

கோவை மாநகராட்சியை கொரோனா இல்லாத மாநகராட்சியாக மாற்றுவதே தனது முதல் இலக்கு என்று, புதிய ஆணையராக பொறுப்பேற்ற ராஜகோபால் சுங்கரா தெரிவித்தார்.

தமிழக அரசு 25 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டிருந்தது. அதன் படி கோவை மாநகராட்சி ஆணையராக இருந்த குமாரவேல் பாண்டியன், வேலூர் மாவட்ட ஆட்சியராக மாற்றம் செய்யப்பட்டு, புதிய ஆணையராக சென்னை மாநகராட்சியின் தெற்கு மண்டல துணை ஆணையர் ராஜகோபால் சுங்கரா நியமிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து, இன்று காலை கோவை மாநகராட்சி அலுவலகம் வந்த ராஜகோபால் சுங்கரா, கோப்புகளில் கையெழுத்திட்டு முறைப்படி பதவி ஏற்றுக் கொண்டார்.

“கோவையில் கொரோனாவை கட்டுப்படுத்துவதே முதன்மை பணி” – மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுங்கரா உறுதி!

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவை மாநகரில் தனது முதன்மை பணி கொரோனாவை கட்டுப்படுத்துவது தான் என்றும், மக்களின் குறைகளை தீர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். கொரோனா இரண்டாம் அலை பரவல் இருக்கும் நிலையில், மூன்றாம் அலையை எதிர்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகவும் ராஜகோபால் சுங்கரா தெரிவித்தார்.

மேலும், கோவை மாநகரில் அரசின் அனுமதியின்றி கடைகள், வணிக நிறுவனங்கள் செயல்படுவது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்த ஆணையர், சென்னை மாநகராட்சியில் உள்ளது போல, கொரோனாவால் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்கக்கு தேவையான பொருட்கள் வழங்க , அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் ஆராயப்படும் என்றும் கூறினார்.