ஸ்மார்ட்போன்களின் விலை ரூ. 1,500 வரை குறைப்பு – சாம்சங் அதிரடி

 

ஸ்மார்ட்போன்களின் விலை  ரூ. 1,500 வரை குறைப்பு – சாம்சங் அதிரடி

சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி ஏ மற்றும் கேலக்ஸி எம் உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களின் விலையை ஆயிரத்து 500 ரூபாய் வரை குறைத்துள்ளது.

ஸ்மார்ட்போன்களின் விலை  ரூ. 1,500 வரை குறைப்பு – சாம்சங் அதிரடி

இதன்படி ரூ. 30,999க்கு விற்பனையான சாம்சங் ஏ71 போன், இனி, ரூ. 29,499க்கு கிடைக்கும். ரூ. 24,999க்கு விற்பனையான 8ஜிபி ரேம் வகை கேலக்ஸி ஏ51 ரக போனுக்கு ஆயிரத்து 500 ரூபாய் தள்ளுபடியும், 6 ஜிபி ரேம் போனுக்கு ஆயிரம் ரூபாய் தள்ளுபடியும் அறிவித்துள்ளது. கேலக்ஸி ஏ31 போன் விலையையும் ஆயிரம் ரூபாய் குறைத்துள்ளது. ஏ21எஸ் போனின் விலையையும் இதேபோல குறைக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போன்களின் விலை  ரூ. 1,500 வரை குறைப்பு – சாம்சங் அதிரடி

பட்ஜெட் போன்களான கேல்க்ஸி எம்01 மற்றும் எம்01 கோர் போன்களின் விலையிலும் தலா 500 ருபாய் வரை சாம்சங் அதிரடியாக குறைத்துள்ளது. பண்டிகை காலத்தை முன்னிட்டு வாடிக்கையாளர்களை கவரும் வகையில் போன்களின் விலையை சாம்சங் குறைத்துள்ளது.

-எஸ். முத்துக்குமார்