ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு!

 

ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு!

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.20 குறைந்துள்ளது.

பொருளாதார சரிவு மற்றும் வரத்து குறைவு காரணமாக பொது முடக்க காலத்தில் தங்கம் விலை எதிர்பாராத அளவுக்கு உயர்ந்தது. இதற்கு முக்கிய காரணம், தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்தது தான். ஊரடங்கு காலத்தில் பொருளாதாரம் முற்றிலுமாக முடங்கிக் கிடந்ததால் வெளிநாடுகளில் மக்கள் தங்கக் காசுகளில் முதலீடு செய்யத் தொடங்கினர். இது தங்கம் விலை உயர்வில் எதிரொலித்தது. அதன் பிறகு ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதால் தங்கம் விலை குறையத் தொடங்கியது.

ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு!

இந்த நிலையில் இன்று சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.4,738க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.37,904க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் 70 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.64.70க்கும் ஒரு கிலோ தங்கம் ரூ.64,700க்கும் விற்பனையாகிறது.