ஐயாயிரத்தை நெருங்கிறது ஒரு கிராம் தங்கத்தின் விலை

 

ஐயாயிரத்தை நெருங்கிறது ஒரு கிராம் தங்கத்தின் விலை

தங்கம் என்பது ஓர் ஆபரணப் பொருள் என்பதைத் தாண்டியும் அது சேமிப்பு என்ற நிலை இருந்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக தங்கம் நல்ல முதலீட்டுக்கான பொருளாக மாற்றப்பட்டுவிட்டது.

கொரோனாவால் அறிவிக்கப்பட்டிருக்கும் லாக்டெளன் கட்டுப்பாட்டால் பெரிய அளவில் கடைகள் திறக்கப்பட வில்லை. ஆயினும் தங்கத்தின் விலை விர்ர்ரென்று உயர்ந்துகொண்டே இருக்கிறது. இதற்கு தங்கம் பங்கு வர்த்தகத்தில் உள்ளதையும் ஒரு கரணமாகச் சொல்லப்படுகிறது.

ஐயாயிரத்தை நெருங்கிறது ஒரு கிராம் தங்கத்தின் விலை

இன்றைய (ஜூலை 27 காலை) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் ஒரு கிராம் விலை 4978 ரூபாய். ஐந்தாயிரத்தைத் தொட இன்னும் 22 ரூபாயே தேவை. ஒரு பவுன் (8 கிராம்) ஆபரணத் தங்கத்தின் விலை 39,824 ரூபாய்.

நேற்றைய (ஜூலை 26) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் ஒரு கிராம் விலை 4904 ரூபாய். ஒரு பவுன் (8 கிராம்) ஆபரணத் தங்கத்தின் விலை 39,232 ரூபாய்.

ஐயாயிரத்தை நெருங்கிறது ஒரு கிராம் தங்கத்தின் விலை

இன்று விற்கப்படும் தங்கத்தின் விலையை நேற்றையை விலையோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் 1 கிராம் தங்கத்தின் விலை இன்று 74 ரூபாய் அதிகரித்து உள்ளது. அதேபோல ஒரு பவுன் (8 கிராம்) தங்கத்தின் விலை 592 ரூபாய் உயர்ந்துள்ளது.

ஒரு கிராம் தங்கம் ஐயாயிரத்தை நெருங்கும் என்பது, பலரும் நினைத்துப் பார்க்காத ஒன்றாகும். திருமணங்கள் அதிகம் நடைபெறாத ஆடி மாதத்திலேயே இந்த விலை எனில், அடுத்த மாதம் இன்னும் விலை கூடுமோ என்ற கவலையும் பலரிடம் இருக்கிறது,