“ஒரே குற்றத்திற்கு இரண்டு முறை கருணை காட்ட முடியுமா என்பது கேள்விக்குறி” – மத்திய உள்துறை அமைச்சகம்

“ஒரே குற்றத்திற்கு இரண்டு முறை கருணை காட்ட முடியுமா என்பது கேள்விக்குறி” – மத்திய உள்துறை அமைச்சகம்

7 பேர் விடுதலை கோரும் ஆவணங்களை ஆராய்ந்த பின்னரே குடியரசுத் தலைவர் முடிவை அறிவிப்பார் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

“ஒரே குற்றத்திற்கு இரண்டு முறை கருணை காட்ட முடியுமா என்பது கேள்விக்குறி” – மத்திய உள்துறை அமைச்சகம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில் ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டது. இருப்பினும் இதன் மீது ஆளுநர் எந்த முடிவும் எடுக்கவில்லை. தற்போது குடியரசு தலைவர் தான் இந்த விவகாரத்தில் முடிவெடுப்பார் என்று ஆளுநர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் 7 பேர் விடுதலை கோரும் ஆவணங்களை ஆராய்ந்த பின்னரே குடியரசுத் தலைவர் முடிவை அறிவிப்பார் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கூறியுள்ள மத்திய உள்துறை அமைச்சகம், பிப்ரவரி 9ம் தேதி நடக்கும் விசாரணையை பொறுத்து 7 பேர் விடுதலை கோரும் ஆவணங்கள் அனுப்பி வைக்கப்படும் . அதன் பின்னரே குடியரசுத் தலைவர் முடிவை அறிவிப்பார்.

“ஒரே குற்றத்திற்கு இரண்டு முறை கருணை காட்ட முடியுமா என்பது கேள்விக்குறி” – மத்திய உள்துறை அமைச்சகம்

7 பேரை விடுதலை செய்ய ஆளுநருக்கு அதிகாரம் இருந்தாலும் உயர் பொறுப்பில் உள்ள குடியரசுத் தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஏழு பேருக்கும் ஏற்கனவே ஒருமுறை கருணை காட்டப்பட்டு, மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. ஒரே குற்றத்திற்கு இரண்டு முறை கருணை காட்ட முடியுமா என்பது கேள்விக்குறி. இதனால் இந்த விவகாரம் குறித்து ஆய்வு செய்ய சில நாட்கள் குடியரசுத்தலைவர் கால அவகாசம் எடுத்துக் கொள்ள வாய்ப்பு உள்ளது. முன்னுதாரணத்தை ஏற்படுத்தக்கூடிய வழக்கு என்பதால் கூடுதல் கவனத்துடன் உச்சநீதிமன்றம் கையாளுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.