தேசியக் கொடி ஏற்றி வைத்தார் குடியரசுத் தலைவர்!

 

தேசியக் கொடி ஏற்றி வைத்தார் குடியரசுத் தலைவர்!

72 வது குடியரசு தினத்தையொட்டி டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

தேசியக் கொடி ஏற்றி வைத்தார் குடியரசுத் தலைவர்!

நம் நாட்டின் 72ஆவது குடியரசு தின விழா, நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் மற்றும் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டிராக்டர் பேரணிக்கு மத்தியில் தலைநகர் டெல்லியில் குடியரசு தின விழா கொண்டாட்டம் நடைபெறுகிறது. இந்த தினத்தையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருக்கும் போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தும் மலர் தூவியும் மோடி மரியாதை செலுத்தினார். பின்னர், அவர் குடியரசு தின நிகழ்ச்சியில் நடைபெறும் டெல்லி ராஜ்பாத்திற்கு வந்தார்.

தேசியக் கொடி ஏற்றி வைத்தார் குடியரசுத் தலைவர்!

இந்த நிலையில், டெல்லி ராஜ்பாத்தில் குடியரசு தினத்தையொட்டி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். சிறப்பு விருந்தினர் இன்றி அங்கு கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது. தற்போது, ராணுவ வலிமையை பறைசாற்றும் விதமாக ராணுவ வீரர்களின் அணிவகுப்பு தொடங்கியிருக்கிறது. அதிநவீன ஆயுதங்களுடன் வீரர்கள் அணிவகுப்பில் பங்கேற்றுள்ளனர். இதைத் தொடர்ந்து, பல்வேறு துறைகளின் அணிவகுப்புகள் நடைபெறவுள்ளது. வழக்கமாக 8 மணிக்கு நடத்தப்படும் குடியரசு தின விழா, டெல்லியில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக தாமதமாக தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.