தமிழகம் முழுவதும் இன்று பிளஸ் 2 செய்முறை தேர்வுகள்!!

 

தமிழகம் முழுவதும் இன்று பிளஸ் 2 செய்முறை தேர்வுகள்!!

கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளுடன் பிளஸ் 2 வகுப்புக்கான செய்முறைத் தேர்வு இன்று நடைபெறுகிறது.

தமிழகம் முழுவதும் இன்று பிளஸ் 2 செய்முறை தேர்வுகள்!!

தமிழகத்தில் கொரோனா தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இருப்பினும் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என்பதில் பள்ளிகல்வித்துறை உறுதியாகவுள்ளது. வரும் 3 ஆம் தேதி பிளஸ் 2 தேர்வுகள் நடக்கவுள்ள நிலையில் இன்று முதல் தமிழகம் முழுவதும் பிளஸ் 2 வகுப்புக்கான செய்முறைத் தோ்வுகள் தொடங்குகின்றன. 24 ஆம் தேதியுடன் செய்முறைத் தோ்வுகள் முடிவடையவுள்ள நிலையில் வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்டது.மாணவர்களும் ஆசிரியர்களும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும், சானிடைசர் கொண்டு தேர்வுக்கு முன்பும், பின்பும் கைகளை நன்கு சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும், ஆய்வகங்களின் ஜன்னல் மற்றும் கதவுகளைத் திறந்து வைக்க வேண்டும், அறை மற்றும் கருவிகளையும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். திரவங்களை வாய் மூலம் உறிஞ்சி எடுக்கும் பிப்பெட் கருவிக்கு தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

தமிழகம் முழுவதும் இன்று பிளஸ் 2 செய்முறை தேர்வுகள்!!

இந்நிலையில் தமிழகம் முழுவதும் இன்று பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளுடன் மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வை நடத்துகிறது பள்ளிக்கல்வித்துறை.இயற்பியல் வேதியியல் விலங்கியல் உயிரியல் உயிரி தாவரவியல் கணினி அறிவியல் செய்முறைத் தேர்வு நடக்கிறது. தமிழகத்தில் 23ஆம் தேதி வரை நடக்கும் செய்முறை தேர்வை ஒன்றரை லட்சம் பிளஸ் 2 மாணவர்கள் எழுதுகின்றனர்.