கன்னியாஸ்திரீ பாலியல் வன்முறை வழக்கு: பிஷப்பின் மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்!

கன்னியாஸ்திரீ பாலியல் வன்முறை வழக்கு: பிஷப்பின் மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்!

கேரள கன்னியாஸ்திரீ பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி பிஷப் பிராங்கோ தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கன்னியாஸ்திரீ பாலியல் வன்முறை வழக்கு: பிஷப்பின் மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்!
கேரளாவில் கன்னியாஸ்திரீ ஒருவரை பிஷப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. வழக்கை எதிர்கொள்ள பிஷப் பிராங்கோ முல்லக்கல்லை பிஷப் பொறுப்பில் இருந்து விடுவிப்பதாக கிறிஸ்தவ சபை அறிவித்தது. இதைத் தொடர்ந்து ஜலந்தர் பிஷப்பாக இருந்த பிராங்கோ முல்லக்கல்லை கோட்டயம் போலீசார் கைது செய்தனர். அதன் பிறகு வழக்குக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது என்ற நிபந்தனை அடிப்படையில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த வழக்கு கேரளாவில் நடந்து வருகிறது.

கன்னியாஸ்திரீ பாலியல் வன்முறை வழக்கு: பிஷப்பின் மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்!
இந்த நிலையில் இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று பிராங்கோ உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார். ஏற்கனவே கீழ் நீதிமன்றம், கேரள உயர் நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் அவர் மனுத் தாக்கல் செய்தது வழக்கைத் தாமதப்படுத்தும் நோக்கமாக பார்க்கப்பட்டது.
இந்த வழக்கைத் தலைமை நீதிபதி பாப்டே, நீதிபதிகள் போபண்ணா, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தியது. அப்போது, இந்த மனு விசாரணைக்கு ஏற்கத் தகுந்தது இல்லை என்று கூறி பிஷப்பின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதனால் நெருக்கடியான நிலையில் பிஷப் பிராங்கோ உள்ளதாக கூறப்படுகிறது.