Home க்ரைம் தங்கம் கடத்திய ’குருவி’ பிடிபட்டார் – சினிமா போல நடந்த சம்பவம்

தங்கம் கடத்திய ’குருவி’ பிடிபட்டார் – சினிமா போல நடந்த சம்பவம்

தங்கம் கடத்திய ’குருவி’ பிடிபட்டார் –  சினிமா போல நடந்த சம்பவம்

வெளிநாடுகளுக்குச் சென்று சட்டவிரோத பொருள்களைக் கடத்தி வருபவர்களை குருவி என்று அழைப்பார்கள். சிலர் தவறுதலாக மாட்டவும் செய்வார்கள்.

அறிமுகம் இல்லாத நபர்கள் தரும் பொருள்களை வாங்காதீர்கள் என்று விமானநிலைய அறிவிப்பு அடிக்கடிக் கூறும். அதைக் கேட்காத ஒருவருக்கு ஏற்பட்ட கதிதான் இன்றைய கதை.

chennai airportஏர் இந்தியா விமானம் iX1636 மூலமாக சார்ஜாவில் இருந்து வரும் பயணி ஒருவர் தங்கம் கடத்திக் கொண்டு வரும் வாய்ப்புள்ளது என்று கிடைத்த தகவலின் அடிப்படையில் ஏ ஐ யு அதிகாரிகள் கடத்தல்காரர்களைப் பிடிக்க சென்னை விமானநிலையத்தில் சிறப்புக் கண்காணிப்பு நடத்தினர்.

அவசரமாகச் செல்ல வேண்டும் என்பது போல் இருந்த பயணி ஒருவர், தன்னிடமிருந்த அட்டைப் பெட்டியுடன் அவசரமாகச் சென்ற போது, அவரை வெளியில் செல்லும் வாயிலில் மடக்கிப் பிடித்தனர்.

அவர், தமிழ்நாட்டின் திருவாரூரைச் சேர்ந்த ஜாகிர் உசேன் என்பது தெரியவந்தது. அந்த அட்டைப் பெட்டியைத் திறந்து பார்த்த போது அதனுள் துணிமணிகள், வீட்டுக்குத் தேவையான பொருள்கள் மற்றும் சில கருவிகள் கொண்ட கிட் ஒன்று இருந்தது.

அந்த வீட்டுக்குள் மின்சார ரெஞ்ச் இயந்திரம் இருந்தது. திருகுகளையும், மறைகளையும் சரி செய்வதற்கான அந்த இயந்திரம் அசாதாரண கனத்துடன் இருந்தது. அதைத் திறந்து பார்த்த போது அதற்குள்ளே உருளை வடிவிலான உலோகத்துண்டு ஒன்று கருப்பு வர்ணம் பூசப்பட்டு மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தங்கம் கடத்திய ’குருவி’ பிடிபட்டார் –  சினிமா போல நடந்த சம்பவம்

தங்கத்தை மதிப்பீடு செய்பவர், அந்தக் கருப்பு வர்ணத்தை அகற்றிவிட்டு, அந்த உலோக உருளை 24 கேரட் கொண்ட 64 லட்சம் ரூபாய் மதிப்பிலான 1.16 கிலோ எடை கொண்ட தங்கத்தால் செய்யப்பட்டது என்றார்.

கருவியை ஷார்ஜா விமான நிலையத்தில், தனக்குத் தெரியாத ஒருவர், தன்னிடம் கொடுத்து, அவர் தனிமைப்படுத்தப்படும் போது (கிண்டியில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றில்) அந்த இடத்தில் ஒருவர் அவரைத் தொடர்பு கொள்வார் என்றும், அவரிடம் அதைக் கொடுத்து விடுமாறும் கூறினார்கள் என்றும் அந்தப் பயணி தெரிவித்தார்.

தங்கம் கடத்திய ’குருவி’ பிடிபட்டார் –  சினிமா போல நடந்த சம்பவம்அந்தப் பயணிக்கு பரிசோதனை நடத்திய பிறகு ஏ ஐ யு குழு ஒன்று அவருடன் பேருந்தில் சென்றது. மற்றொரு குழு பேருந்தின் பின்னே சென்றது. அந்த ஹோட்டலை அடைந்தவுடன் அவருக்காகக் காத்திருந்த நபரை அந்தப் பயணி தொடர்பு கொண்டு காத்திருந்தவரிடம் அந்தக் கருவியை ஒப்படைத்தார். பயணியும் அந்த கருவியைப் பெற்றுக் கொண்ட சென்னையைச் சேர்ந்த முகமது ஆசிப் என்ற நபரும் கைது செய்யப்பட்டனர்.

தங்கம் கடத்திய ’குருவி’ பிடிபட்டார் –  சினிமா போல நடந்த சம்பவம்
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

கிராமங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஐடியா கொடுத்த பிரதமர் மோடி!

கொரோனா பாதிப்பு நிலவரம், தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆகியவை குறித்து சுகாதாரத் துறை அமைச்சக அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று உயர்மட்ட ஆலோசனை நடத்தினார்....

சிவகார்த்திகேயன் பட நடிகர் பவுன்ராஜ் திடீர் மரணம்… அதிர்ச்சியில் திரையுலகம்!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வரும் நிலையில், ஆயிரக் கணக்கானோர் கொரோனாவால் உயிரிழக்கின்றனர். திரை பிரபலங்கள் பலரின் உயிரிழப்புகளும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. நகைச்சுவை நடிகர்...

2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டால் மாஸ்க் அணிய வேண்டாமா?

கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் உலக மக்களை ஆட்டிப்படைக்கத் தொடங்கிய கொரோனா வைரஸ் தொடர்ந்து மக்களை அச்சுறுத்தி வருகிறது. தற்போது இரண்டாம் அலை பரவ தொடங்கியிருக்கிறது. கொரோனா தொற்றுக்கு ஆரம்பக்...

தாமதமாக வந்த எம்எல்ஏக்கள்… ‘ரூ.2,000 பெற’ 4 மணி நேரம் காத்துக் கிடந்த பொதுமக்கள்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது கொரோனா நிவாரண நிதியாக ரூ.4,000 வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதை ஏற்கவில்லை. நடந்து...
- Advertisment -
TopTamilNews