“புது ரூபாய் நோட்டுக்கு பலமடங்கு பழைய நோட்டு” நூதன முறையில் பால்காரரை ஏமாற்றிய நபர் ..

“புது  ரூபாய் நோட்டுக்கு பலமடங்கு பழைய நோட்டு” நூதன முறையில் பால்காரரை  ஏமாற்றிய நபர் ..

ஆக்ரா அருகே உகார்ரா கிராமத்தில் வசிக்கும் பாவ் சிங் என்பவர் பால் வியாபாரம் செய்பவர் .இவரிடம் ஒரு ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் ராகேஷ் என்பவர் கடந்த மாதம் வந்து நீங்கள் புதிய 1.5 லட்சம் கொடுத்தால் நான் பழைய நோட்டாக 32 லட்சம் தருகிறேன் என்றார் .அதை நம்பிய அவர் தன்னிடம் இருந்த 1.5 லட்சம் ரூபாயினை கொண்டு வந்து கொடுத்தார் .அதை வாங்கிக்கொண்ட அவர் உடனே பால்காரரிடம் 32 லட்சம் இருந்த பையை கொடுத்தார் .அதை பிரித்து பார்த்த அவர் எல்லாமே பழைய 500 ,1000 ரூபாயாக இருந்ததால் இதை எப்படி மாற்றுவது என்று கேட்டார் .

“புது  ரூபாய் நோட்டுக்கு பலமடங்கு பழைய நோட்டு” நூதன முறையில் பால்காரரை  ஏமாற்றிய நபர் ..
அதற்கு ராகேஷ் ,இந்த பணத்திற்கு என்னிடம் கணக்கு இல்லாததால் வங்கியில் என்னால் மாற்ற முடியவில்லை .அதனால் நீ போய் வங்கியில் கொடுத்தால் மாற்றி தருவார்கள் என்று பொய் சொல்லிவிட்டு அவர் கொடுத்த பணத்துடன் ஓடிவிட்டார் .அவர் சொன்னதை உண்மையென நம்பிய பால்காரர் வங்கியில் கொண்டு போய் அந்த பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற போனபோது ,வங்கியில் மாற்றமுடியாது என திருப்பி அனுப்பியதுடன் , அவர்கள் போலீசுக்கும் தகவல் கொடுத்தனர் .உடனே வந்த போலீசார் அவரையும் அவருடன் வந்த அல்பதியாவில் வசிக்கும் நீரஜ் தோமர் என்பவரையும் பிடித்து விசாரித்தபோது ,தங்களை ராகேஷ் ஏமாற்றிய விவரத்தினை கூறினார்கள் .

“புது  ரூபாய் நோட்டுக்கு பலமடங்கு பழைய நோட்டு” நூதன முறையில் பால்காரரை  ஏமாற்றிய நபர் ..
உடனே போலீசார் ராகேஷை தேடி அவர் வீட்டுக்கு சென்ற போது, அவர் போலீஸ் தன்னை தேடி வரும் விஷயத்தை தெரிந்து கொண்டு பயந்து போய் தற்கொலை செய்து கொண்டார்.போலீசார் வழக்கு பதிவு செய்து ,வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவித்து விசாரணை செய்து வருகிறார்கள் .

“புது  ரூபாய் நோட்டுக்கு பலமடங்கு பழைய நோட்டு” நூதன முறையில் பால்காரரை  ஏமாற்றிய நபர் ..