மதுரை மக்களுக்கும் ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி வழங்க வேண்டும் : டிடிவி தினகரன் வேண்டுகோள்!

 

மதுரை மக்களுக்கும் ஆயிரம் ரூபாய்  நிவாரண நிதி வழங்க வேண்டும் : டிடிவி தினகரன் வேண்டுகோள்!

கொரோனா வைரஸ் தமிழக மக்களின் இயல்பு வாழ்க்கையை பெருமளவு பாதித்துள்ளது. குறிப்பாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. இந்த கொடிய வகை வைரஸில் இருந்து மக்களை காக்க ஊரடங்கு அமலில் இருந்து வரும் நிலையில் செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் கடந்த 19 ஆம் தேதி முதல் வரும் ஜூன் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு கடுமையாக்கப்பட்டுள்ளது.

மதுரை மக்களுக்கும் ஆயிரம் ரூபாய்  நிவாரண நிதி வழங்க வேண்டும் : டிடிவி தினகரன் வேண்டுகோள்!

அதனால் பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ரூ.1000 நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார். மேலும், அம்மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடை அட்டைதாரர்களின் வீடு தேடி வந்து 22 ஆம் தேதி முதல் நிவாரணத் தொகை கொடுக்க உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். அதன் படி, நேற்று முதல் அந்த 4 மாவட்டங்களிலும் ரூ.1000 உதவித்தொகை விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் மதுரையில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் ஜூன் 30ம் தேதி இரவு வரை 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மக்களுக்கும் ஆயிரம் ரூபாய்  நிவாரண நிதி வழங்க வேண்டும் : டிடிவி தினகரன் வேண்டுகோள்!
இந்நிலையில் இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது டிவிட்டர் பக்கத்தில், “சென்னையைப் போல மக்களைக் கூட்டமாக சேர்க்காமல் அவரவர் வீடுகளுக்கே சென்று இந்த நிதியை வழங்கிட வேண்டும். மேலும் மதுரையில் ஊரடங்கு அமலாகும் இடங்களில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் கட்டணமில்லாமல் உணவு அளிப்பதற்கான நடவடிக்கையையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். கொரோனா பரவலைத் தடுப்பதற்காக முழு ஊடரங்கு அறிவிக்கப்பட்டுள்ள மதுரை பகுதி மக்களுக்கும் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வழங்குவதைப் போல ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி வழங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்” என்று கூறியுள்ளார்.