Home தமிழகம் மின் கட்டணம் செலுத்துவதற்கான அவகாசத்தை ஜூலை 15க்கு மேல் நீட்டிக்க முடியாது - மின்சார வாரியம்

மின் கட்டணம் செலுத்துவதற்கான அவகாசத்தை ஜூலை 15க்கு மேல் நீட்டிக்க முடியாது – மின்சார வாரியம்

ஜூன் 15 ஆம் தேதிக்கு உள்ளாகவும் மின் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

கொரோனா நோய் தொற்றால் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை இழந்துள்ளனர். இதனால் அரசு முடிந்தளவு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் மின் கட்டணம் செலுத்த அரசு காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. அதாவது சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஜூலை 6 ஆம் தேதிக்கு உள்ளாகவும் மற்ற மாவட்டங்களில் ஜூன் 15 ஆம் தேதிக்கு உள்ளாகவும் மின் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் பொதுமுடக்க பகுதிகளில் மின்கட்டணம் செலுத்த ஜூலை 15 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அன்றைய தேதிவரை என அபராதமின்றி கட்டணத்தை செலுத்தலாம் என மின்சார வாரியம் அறிவித்தது. முடிந்தவரை இணையதளம் வாயிலாக மின் கட்டணத்தை செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில் சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த ஜூலை 15 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
பிற மாவட்டங்களில் ஜூன் 15க்குள் செலுத்த வேண்டுமென்ற காலக்கெடுபடி 75% நுகர்வோர் மின் கட்டணம் செலுத்திவிட்டதால் கால நீட்டிப்பு வழங்க முடியாது என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

மாவட்ட செய்திகள்

Most Popular

புதுச்சேரியில் கொரோனா தடுப்பூசி பணியை தொடக்கி வைத்தார் முதல்வர்!

நாடு முழுவதும் 3,000 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கிவிட்டது. எல்லா இடங்களிலுமே முன்களப்பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. கொரோனா தடுப்பூசி போடும் பணியை காணொளி...

‘எனக்கு பாலாவை பிடிக்கும் ப்ரோ’ – பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய கேபியின் லைவ் வீடியோ!

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய கேப்ரியலா சமூக வலைதளத்தில் ரசிகர்களுடன் நேற்று உரையாடினார். பிக் பாஸ்...

கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வரும் அவரின் தாயார் மறைவு மிகப்பெரிய இழப்பாகும்… நடிகர் விஷால்

சிறந்த படங்களை இயக்கி கொண்டிருக்கும் எனது நண்பர் டைரக்டர் சுசீந்திரன் தாயார் ஜெயலட்சுமி மறைவு செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்தேன் என்று தெரிவித்திருக்கிறார் நடிகர் விஷால். மேலும், கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து...

‘கிராமுக்கு ரூ.48 குறைவு’ : ரூ.36 ஆயிரத்தில் தங்கம் விலை!

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.48 குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்திருந்ததால், தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது தெரிந்தவையே. பொருளாதார வீழ்ச்சியை...
Do NOT follow this link or you will be banned from the site!