பாஜக 34; தேமுதிக 20; அதிர்ச்சியில் அதிமுக!

 

பாஜக 34; தேமுதிக 20; அதிர்ச்சியில் அதிமுக!

அதிமுக கூட்டணியில் தொகுதிப்பங்கீடு இன்னும் முடிவுக்கு வராததால் கட்சி தலைமை அதிர்ச்சியில் உள்ளது.

பாஜக 34; தேமுதிக 20; அதிர்ச்சியில் அதிமுக!

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக – அதிமுக கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு, பிரச்சாரம் என தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. திமுக கூட்டணி கட்சிக்களான மதிமுக, விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் திமுக தலைமை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதேபோல் அதிமுக – பாஜக இடையேயான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

பாஜக 34; தேமுதிக 20; அதிர்ச்சியில் அதிமுக!

இந்நிலையில் அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிக்கிறது . பாஜக 34 இடங்களும், தேமுதிக 20 இடங்களும் கேட்பதால் அதிமுக தலைமை அதிர்ச்சியில் உள்ளது. இதனால் இன்றும் பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது. இன்று பேச்சுவார்த்தை முடிவில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. தொகுதி பங்கீடு நிறைவு பெற்றதாக கூறப்பட்ட நிலையில் பாஜக கேட்கும் சீட்டுகளின் எண்ணிக்கையை கேட்டு அதிமுக தலைமை அதிருப்தியில் உள்ளதாம். 34 சீட் கேட்கும் பாஜகவுக்கு 24 முதல் 27 தொகுதிகள் வரை ஒதுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் எதற்கும் பிடிக்காமல் 34 சீட்டுகள் என்ற ஒற்றை கோரிக்கையுடன் முரண்டு பிடித்து கொண்டிருக்கிறதாம் பாஜக. அதேபோல் தேமுதிக 20 தொகுதிகள் தாருங்கள்; இல்லையென்றால் தனித்து போட்டி என சொல்லி வருகிறதாம். இதுதொடர்பான ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக உள்ளதாக தெரிகிறது.