ஜூலை 6 முதல் 31ஆம் தேதி வரை உணவகங்களில் பார்சல் மட்டுமே வழங்கப்படும்: மதுரை மாவட்ட ஹோட்டல்கள் சங்கம்!

ஜூலை 6 முதல் 31ஆம் தேதி வரை உணவகங்களில் பார்சல் மட்டுமே வழங்கப்படும்: மதுரை மாவட்ட ஹோட்டல்கள் சங்கம்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 4,329 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,02,721 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,385 ஆக அதிகரித்துள்ளது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரை, தேனி உள்பட சில மாவட்டங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் 64,689 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜூலை 6 முதல் 31ஆம் தேதி வரை உணவகங்களில் பார்சல் மட்டுமே வழங்கப்படும்: மதுரை மாவட்ட ஹோட்டல்கள் சங்கம்!

மதுரையில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் தீவிரமாகி வருகிறது. அந்த வகையில் மதுரையில் இன்று மட்டும் 280 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. புதிய பாதிப்புகள் சேர்த்து மதுரையில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 3,703 ஆக அதிகரித்துள்ளது. சென்னைக்கு அடுத்ததாக மதுரையில் தான் கொரோனா பரவல் அதிகரித்து வருவது கவனிக்கத்தக்கது.

ஜூலை 6 முதல் 31ஆம் தேதி வரை உணவகங்களில் பார்சல் மட்டுமே வழங்கப்படும்: மதுரை மாவட்ட ஹோட்டல்கள் சங்கம்!
இந்நிலையில் மதுரையில் ஜூலை 6 முதல் 31ஆம் தேதி வரை உணவகங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி இல்லை என்றும் பார்சல் மட்டுமே வழங்கப்படும் என மதுரை மாவட்ட ஹோட்டல்கள் சங்கம் அறிவித்துள்ளது. வரும் 6 ஆம் தேதி முதல் சென்னை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வு செய்யப்படும் நிலையில் மதுரை மாவட்ட ஹோட்டல்கள் சங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது.