மோசம் தான் ஆனாலும் ஏப்ரலை காட்டிலும் மே மாதம் பரவாயில்லை… முக்கிய 8 துறைகள் உற்பத்தி

 

மோசம் தான் ஆனாலும் ஏப்ரலை காட்டிலும் மே மாதம் பரவாயில்லை… முக்கிய 8 துறைகள் உற்பத்தி

கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சிமெண்ட், நிலக்கரி, மின்சாரம், உருக்கு, பெட்ரோலிய சுத்திகரிப்பு பொருட்கள் மற்றும் உரம் ஆகியவை முக்கிய 8 துறைகளாகும். கொரோனா வைரஸ் பரவுவதை தவிர்க்க கடந்த மார்ச் 25ம் தேதி முதல் நாடு தழுவிய லாக்டவுன் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனால் அந்த மாதத்தில் முக்கிய துறைகளின் உற்பத்தி 6.5 சதவீதம் குறைந்தது. லாக்டவுன் தொடக்கதிலேயே முக்கிய 8 துறைகளின் உற்பத்தியில் பின்னடைவு ஏற்பட்டதால் வரும் மாதங்களில் அந்த துறைகளின் உற்பத்தி எப்படி இருக்குமோ என்ற அச்சம் மற்றும் கவலை ஏற்பட்டது.

மோசம் தான் ஆனாலும் ஏப்ரலை காட்டிலும் மே மாதம் பரவாயில்லை… முக்கிய 8 துறைகள் உற்பத்தி

எதிர்பார்த்தது போலவே 2020 ஏப்ரல் மாதத்தில் முக்கிய 8 துறைகளின் உற்பத்தி 38.1 சதவீதம் வீழ்ச்சி கண்டது. அதேசமயம் மே மாதத்தில் லாக்டவுன் விதிமுறைகள் சிறிது தளர்த்தப்பட்டதால் அந்த மாதத்தில் முக்கிய 8 துறைகளின் உற்பத்தி நிலவரம் முந்தைய ஏப்ரல் மாதம் அளவுக்கு மோசமாக இருக்காது என எதிர்பார்க்கப்பட்டது. அது போலவே கடந்த மே மாதத்தில் முக்கிய துறைகளின் உற்பத்தி வீழ்ச்சி சிறிது குறைந்துள்ளது. கடந்த மே மாதத்தில் முக்கிய 8 துறைகளின் உற்பத்தி 23.4 சதவீதம் சரிவடைந்துள்ளது. 2019 மே மாதத்தில் முக்கிய 8 துறைகள் உற்பத்தி 3.8 சதவீதம் வளர்ச்சி கண்டு இருந்தது.

மோசம் தான் ஆனாலும் ஏப்ரலை காட்டிலும் மே மாதம் பரவாயில்லை… முக்கிய 8 துறைகள் உற்பத்தி

கடந்த மே மாதத்தில் முக்கிய 8 துறைகளின் உற்பத்தி குறைந்துள்ளதால் அந்த மாதத்தில் தொழில்துறை உற்பத்தியும் பின்னடைவை சந்தித்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழில்துறை குறியீட்டை கணக்கிடுவதில் இந்த 8 துறைகளின் பங்களிப்பு சுமார் 40 சதவீதம் என்ற அளவில் உள்ளது. அதனால் எட்டு துறைகளின் துறைகளின் வளர்ச்சியை வைத்தே தொழில்துறை வளர்ச்சி எப்படி இருக்கும் என்பதை நம்மால் ஓரளவு யூகிக்க முடியும்.