பஸ், ரயில், மெட்ரோவில் செல்ல இனி ஒரே பாஸ்!

 

பஸ், ரயில், மெட்ரோவில் செல்ல இனி ஒரே பாஸ்!

பஸ், ரயில், மெட்ரோவில் செல்ல ஒரே பாஸ் பயணம் செய்ய சட்ட மசோதா தாக்கல் செய்யப்படுகிறது.

கொரோனா காரணமாக தமிழகத்தில் போக்குவரத்து சேவை கடந்த 5 மாத காலமாக நிறுத்தப்பட்டு இம்மாதம் முதலே ஆரம்பிக்கப்பட்டது. ஆனாலும் கொரோனா அச்சம் காரணமாக மக்கள் குறைவாகவே பயணித்து வருவதாக தெரிகிறது.

பஸ், ரயில், மெட்ரோவில் செல்ல இனி ஒரே பாஸ்!

மேலும் பழைய பஸ் பாஸே தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் புதிதாக பஸ் மற்றும் ரயில் பாஸ் எடுக்க மக்கள் பொருளாதார நிலைமையின் காரணமாக சிரமப்பட்டு வருகிறார்கள். மேலும் பஸ் மற்றும் ரயில் பாஸ் எடுக்கக் கோரினால் கூட்டம் அபாயமும் உள்ளது.

பஸ், ரயில், மெட்ரோவில் செல்ல இனி ஒரே பாஸ்!

இந்நிலையில் சென்னையில் ஒரே பாஸில் மாநகரப் பேருந்தில், மெட்ரோ, புறநகர் ரயிலில் பயணம் செய்ய சட்ட மசோதா தாக்கல் இன்று பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது. ஒருங்கிணைந்த போக்குவரத்து அதிகாரம் சட்டத்திருத்தம் மூலம் மசோதா தாக்கல் ஆக உள்ளது. புதிய திட்டத்தை துணை முதல்வர் ஓபிஎஸ் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார் .