இரவில் மட்டும் லாக்டெளன் அறிவித்த நாடு – அதிகரிக்கும் கொரோனா

 

இரவில் மட்டும் லாக்டெளன் அறிவித்த நாடு – அதிகரிக்கும் கொரோனா

கொரோனாவின் தாக்கம் உலகம் முழுவதுமே அதிகரித்த வண்ணம் உள்ளது. சில நாடுகளில் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்தாலும், பல நாடுகளில் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 6 கோடியே 35 லட்சத்து 89 ஆயிரத்து 725 பேர். கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 4 கோடியே 39 லட்சத்து 84 ஆயிரத்து 723 நபர்கள்.

இரவில் மட்டும் லாக்டெளன் அறிவித்த நாடு – அதிகரிக்கும் கொரோனா

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 14 லட்சத்து 73 ஆயிரத்து 926 பேர்.  இறப்போர் சதவிகிதம் குறைந்துகொண்டே வந்தாலும் புதிய நோயாளிகளும் அதிகரித்து வருகிறார்கள். தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 1,81,31,076 பேர்.

துருக்கி நாட்டில் சமீபமாக நோய்த் தொற்று அதிகரித்து வருகிறது. துருக்கியில் இதுவரையிலான பாதிப்பு 6,38,847 பேர். இவர்களில் 4,04,727 பேர் குணமடைந்துவிட்டனர். சிகிச்சை பலனின்றி இறந்தவர்கள் எண்ணிக்கை 13,746.

இரவில் மட்டும் லாக்டெளன் அறிவித்த நாடு – அதிகரிக்கும் கொரோனா

நவம்பர் மாத இறுதி வாரத்திலிருந்து துருக்கில் கொரோனா பரவல் மிக அதிகமாக இருக்கிறது. அதற்கு முன் அதிகபட்சமாக 5000 ஆக இருந்தது. நவம்பர் 26-ம் தேதி 20,132 பேராக அதிகரித்தது. நேற்று மட்டுமே 31,219 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது.

இதனால் துருக்கியில் தினமும் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரையில் லாக்டெளன் அறிவிக்கப்பட்டிருக்கிறது. வார விடுமுறைக்கும் லாக்டெளன் விதிமுறைகள் நீடிக்கிறது. வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்குத் தொடங்கும் ஊரடங்கு, திங்கள் கிழமை காலை 5 மணி வரை நீடிக்குமா. இதனை அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.

வேகமாகப் பரவி வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த துருக்கி நாட்டு அரசு பல்வேறு வழிமுறைகளை அறிவித்து வருகிறது.