தமிழகத்தில் இன்று முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்!

தமிழகத்தில் இன்று முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்!

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை தமிழகத்தில் இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

தமிழகத்தில் இன்று முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்!

இத்திட்டத்தின் மூலம் குடும்ப அட்டைதாரர்கள் தனது கிராமத்துக்கு உட்பட்ட ரேஷன் கடைகள் உட்பட வேறு எந்தப் பகுதியிலும் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிற மாநில குடும்ப அட்டை வைத்திருப்பவர்களும் ரேஷன் கடைகளில் கைரேகையை பதிவு செய்து பொருட்களை வாங்கலாம். இதனால் பயோமெட்ரிக் எனும் கைரேகை பதிவு செய்யும் கருவிகள் ரேஷன் கடைகளில் பொருத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில் இன்று முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்!

சோதனை அடிப்படையில் ஜனவரி 1 முதல் நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் இத்திட்டம் அமல்படுத்தப் பட்டிருந்தது . ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் தமிழகத்தில் 32 மாவட்டங்களில் இன்று முதல் அமலுக்கு வருகிறது. தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், மதுரை, திருவண்ணாமலையில் அக்டோபர் 15 முதல் அமலுக்கு வரவுள்ளது.