வாக்கு எண்ணிக்கை சுற்றைக் குறைக்கக் கூடாது – திமுக வலியுறுத்தல்!

 

வாக்கு எண்ணிக்கை சுற்றைக் குறைக்கக் கூடாது – திமுக வலியுறுத்தல்!

கடந்த 6ம் தேதி நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் மே 2ம் தேதி நடைபெறவுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் வாக்கு எண்ணிக்கையை பாதுகாப்பாக நடத்துவது குறித்தும் அதிகாரி, ஏஜெண்டுகளுக்கு கொரோனா பரிசோதனை செய்வது குறித்தும் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் தற்போது ஆலோசனை நடத்தி வருகிறார்.

வாக்கு எண்ணிக்கை சுற்றைக் குறைக்கக் கூடாது – திமுக வலியுறுத்தல்!

இதற்கு முன்னதாக, சென்னையில் வாக்கு எண்ணிக்கையை நடத்துவது குறித்து தேர்தல் அலுவலர் பிரகாஷ் அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, சென்னையில் 13 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை சுற்றை குறைக்க திட்டமிடப்பட்டது. அதற்கு திமுக தரப்பில் எதிர்ப்பு குரல்கள் எழுந்தன. சுற்றுகளை குறைப்பதற்கு பதில் மாற்று ஏற்பாடாக கூடுதல் அறைகளில் 14 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கையை நடத்த திமுக வலியுறுத்தியது.

இதையடுத்து, ஒரு தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை 2 ஆக அதிகரிக்க வேண்டுமென பாஜக தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. 14 சுற்று வாக்கு எண்ணிக்கையை 7 சுற்றுகளாக இரண்டு அறைகளில் நடத்தவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. சென்னையில் வாக்கு எண்ணிக்கை சுற்று குறைக்கப்படுகிறதா? இல்லையா? என்ற தகவல் விரைவில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.