ஒரு கோடியை எட்டியது குணமடைந்தோர் எண்ணிக்கை !

 

ஒரு கோடியை எட்டியது குணமடைந்தோர் எண்ணிக்கை !

இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை ஒரு கோடியை எட்டியுள்ளது.

இந்தியாவில் கடந்த 2 மாதங்களாக கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருந்து வருகிறது. இதன் காரணமாக, கொரோனாவால் பிறப்பிக்கப்பட்டிருந்த அனைத்து கட்டுப்பாடுகளுக்கும் மத்திய அரசு தளர்வு அளித்து விட்டது. இருப்பினும், ஒரு சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பை பொறுத்து சில கட்டுப்பாடுகள் தொடருகின்றன. இதனிடையே, பிரிட்டனில் பரவி வரும் வீரியமிக்க புதிய வகை கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவத் தொடங்கியது.

ஒரு கோடியை எட்டியது குணமடைந்தோர் எண்ணிக்கை !

பிரிட்டனில் இருந்து இந்தியா வந்தவர்கள் மூலமாக தற்போது 60க்கும் மேற்பட்டோர் புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த புதிய வகை கொரோனா வைரஸ், 70% வேகமாக பரவும் தன்மைக் கொண்டதால் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 99.97 லட்சத்தில் இருந்து 1 கோடியாக அதிகரித்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,00,16,859 ஆக அதிகரித்துள்ளதாகவும், குணமடைந்தோர் விகிதம் 96.36% ஆக உயர்ந்துள்ளதாகவும் உயிரிழப்பு விகிதம் 1.45% ஆக குறைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.