தமிழகத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கை 1 கோடியை கடந்தது

 

தமிழகத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கை 1 கோடியை கடந்தது

தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக தடுப்பூசிகளை மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து, 2 நாட்களாக தமிழகத்துக்கு தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சனிக்கிழமை காலையில் ஹைதராபாத்தில் இருந்து ஒரு லட்சத்து26ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் விமானம் மூலம் சென்னை வந்தது. தொடர்ந்து, மாலையில் புனேவில் இருந்து சுமார் 7லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகளும் சென்னை வந்தடைந்தன. 62 பார்சல்களில் வந்த தடுப்பூசிகளை தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர்.

தமிழகத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கை 1 கோடியை கடந்தது

இந்நிலையில் தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை கடந்தது. இன்று 3,26,573 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில், இதுவரை தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை 1,01,30,594 ஆக உயர்ந்துள்ளது.