ஒரே நாளில் 77 பேருக்கு பாசிடிவ்… விருதுநகரிலும் ஆட்டத்தை ஆரம்பித்ததா கொரோனா?

 

ஒரே நாளில் 77 பேருக்கு பாசிடிவ்… விருதுநகரிலும் ஆட்டத்தை ஆரம்பித்ததா கொரோனா?

விருதுநகர் மாவட்டத்தில் ஒரே நாளில் 77 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

ஒரே நாளில் 77 பேருக்கு பாசிடிவ்… விருதுநகரிலும் ஆட்டத்தை ஆரம்பித்ததா கொரோனா?விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமாக இல்லை. மூன்று மாத முடிவில் 350 பேருக்கு தொற்று ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சென்னையில் முழு ஊரடங்கு மீண்டும் கொண்டுவரப்பட்ட பிறகு மற்ற மாவட்டங்களைப் போல விருதுநகர் மாவட்டத்திலும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியிருப்பது பீதியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 77 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. அதிலும் குறிப்பாக விருதுநகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மட்டும் 34 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதில் 22 பேர் விருதுநகர் நகர்ப்பகுதியைச் சேர்ந்தவர்கள்.

ஒரே நாளில் 77 பேருக்கு பாசிடிவ்… விருதுநகரிலும் ஆட்டத்தை ஆரம்பித்ததா கொரோனா?இதனால் விருதுநகரில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 440 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 175 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் ஒரு சில நாட்களாக கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவது பீதியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலிருந்து சொந்த ஊர் திரும்பியவர்கள் மூலம் கொரோனா தொற்று அதிகரித்திருக்கலாம் என்ற அச்சம் உள்ளது. மாவட்ட நிர்வாகம் சென்னையிலிருந்து வந்தவர்களைக் கண்டறிந்து, அவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தி அதன்பிறகே மாவட்டத்துக்குள் அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.