”செல்போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 114 கோடியாக சரிவு” – 45 லட்சம் புதிய இணைப்புகள் பெற்ற ஜியோ !

”செல்போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 114 கோடியாக சரிவு” – 45 லட்சம் புதிய இணைப்புகள் பெற்ற ஜியோ !

கடந்த ஜூன் மாத முடிவில் செல்போன் பயன்படுத்தவோரின் எண்ணிக்கை 114 கோடியாக குறைந்துள்ள நிலையில், 45 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை ஜியோ நிறுவனம் பெற்றுள்ளது.

”செல்போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 114 கோடியாக சரிவு” – 45 லட்சம் புதிய இணைப்புகள் பெற்ற ஜியோ !

இது தொடர்பாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை கட்டுப்பாட்டு ஆணையமான டிராய் அறிக்கைவெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த ஜூன் மாதத்தில் செல்போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 32 லட்சம் என்ற அளவில் குறைந்து 114 கோடியாகி உள்ளது தெரியவந்துள்ளது. அதே சமயம் தொடர்ந்து ஜியோ நிறுவனம் சந்தையில் முன்னணியில் உள்ளதும் தெரியவந்துள்ளது.

கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் புதிதாக 44 லட்சத்து 90 ஆயிரம் பேர் வாடிக்கையாளர்களாக இணைந்துள்ளனர். அதே சமயம், ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் முறையே, 11.2 லட்சம் மற்றும் 48.2 லட்சம் வாடிக்கையாளர்களையும் இழந்துள்ளன..

”செல்போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 114 கோடியாக சரிவு” – 45 லட்சம் புதிய இணைப்புகள் பெற்ற ஜியோ !

டிராயின் அறிக்கையின் படி, ஜன் மாதத்தில் கூடுதலாக 45 லட்சம் வாடிக்கையாளர்களை தன்வசப்படுத்தி, முன்னணியில் உள்ள ஜியோ நிறுவனம் 35 சதவீத சந்தை பங்குடன் சந்தையில் , தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதைத்தொடர்ந்து ஏர்டெல் 27.7 சதவீத சந்தை பங்கையும், வோடபோன் ஐடியா (விஐ) 26.7 சதவீத சந்தை பங்கையும், பிஎஸ்என்எல் நிறுவனம் 10.3 சதவீத சந்தை பங்கையும் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

  • எஸ். முத்துக்குமார்