அனைத்துலக சிறந்த படைப்பாக “வேள்பாரி” நாவல் தேர்வு!

 

அனைத்துலக சிறந்த படைப்பாக “வேள்பாரி” நாவல் தேர்வு!

அனைத்துலக சிறந்த படைப்பாக சு.வெங்கடேசன் எழுதிய வேள்பாரி நாவல் தேர்வாகியுள்ளது.

அனைத்துலக சிறந்த படைப்பாக “வேள்பாரி” நாவல் தேர்வு!

சாகித்ய அகாடமி விருதுபெற்ற காவல் கோட்டம்  நாவல் மற்றும் புகழ்பெற்ற வேள்பாரி போன்ற நூல்களை எழுதியவர் சு.வெங்கடேசன். கடந்த மக்களவை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் மதுரையில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். மதுரை மாவட்டம் ஹார்விபட்டி தான் இவரின் சொந்த ஊர். இளங்கலை வணிகவியல் படித்த வெங்கடேசன் இதுவரை 4 கவிதை தொகுப்புகள், 5 கட்டுரை தொகுப்புகள், 2 புதினங்கள், ஒரு கிராஃபிக் நாவல் எழுதியுள்ளார்.

அனைத்துலக சிறந்த படைப்பாக “வேள்பாரி” நாவல் தேர்வு!

இவர் எழுதிய முதல் நாவலான காவல் கோட்டம் நூலுக்கு 2011ம் ஆண்டுக்கான சாகித்ய அக்காதமி விருது வழங்கப்பட்டது. இந்த நாவலை தழுவியே 2012ஆம் ஆண்டு இயக்குநர் வசந்தபாலன் அரவான் திரைப்படத்தை இயக்கினார். தமிழின் தொன்மை பற்றியும், கீழடி ஆய்வு தரவுகளின் தாக்கம் பற்றியும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி இவர் தொடர்ந்து தமிழ் சமுதாயத்திற்கு ஆதரவாக தனது கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்.

அனைத்துலக சிறந்த படைப்பாக “வேள்பாரி” நாவல் தேர்வு!

இந்நிலையில் மலேசியா தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கத்தின் டான் ஸ்ரீ கே.ஆர். சோமா மொழி இலக்கிய அறவாரியம், அனைத்துலக சிறந்த படைப்பாக சு.வெங்கடேசன் எழுதிய வீரயுக நாயகன் வேள்பாரி நாவலை தேர்வு செய்துள்ளது.இந்த அறிவிப்பை தொடர்ந்து பலரும் எம்.பி. சு. வெங்கடேசனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.