தமிழகத்தின் வடமேற்கு மாவட்டங்களில் வெப்பம் அதிகமாக இருக்கும்!

 

தமிழகத்தின் வடமேற்கு மாவட்டங்களில் வெப்பம் அதிகமாக இருக்கும்!

தமிழகத்தில் கோடைக்காலம் நிலவி வருவதால் பல இடங்களில் 100 டிகிரிக்கும் மேல் வெப்பம் வாட்டி வதைத்துவருகிறது. ஏற்கனவே கொரோனா வைரஸ் பாதிப்பால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீட்டிலேயே இருக்கின்றனர். அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் தமிழகத்தில் கடந்த மாதம் 28 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. அதன் பிறகும் வெப்பம் மக்களை வாட்டி வதைத்து வந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் வங்கக் கடலில் உருவான ஆம்பன் புயல் கரையை கடக்கும் போது, ஈரப்பதம் முழுவதையும் இழுத்துச் சென்று விட்டது. அதனால் தமிழகத்தில் வெப்பம் மேலும் அதிகரித்தது.

தமிழகத்தின் வடமேற்கு மாவட்டங்களில் வெப்பம் அதிகமாக இருக்கும்!

இந்த நிலையில், தமிழகத்தின் வடமேற்கு மாவட்டங்களில் அதிகபட்சமாக வெயில் இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் காலை 11.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை திறந்தவெளியில் வேலை செய்ய வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்ததுள்ளது. மேலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பாக தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.