பட்ஜெட்டில் எங்களுக்கு கொஞ்சம் அதிகமாக நிதி ஒதுக்குங்க.. சாலை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம்

 

பட்ஜெட்டில் எங்களுக்கு கொஞ்சம் அதிகமாக நிதி ஒதுக்குங்க.. சாலை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம்

மத்திய பட்ஜெட்டில் சாலை மற்றும் நெடுஞ்சாலை துறைக்கு ரூ.1.40 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தலைமையிலான சாலை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது.

மத்திய பட்ஜெட்டில் ஒவ்வொரு துறைக்கும் நிதி ஒதுக்கப்படுகிறது. அந்த நிதியை கொண்டுதான் சம்பந்தப்பட்ட துறைகள் தங்களது செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சி பணிகளை மேற்கொள்கின்றன. மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வத்றகு முன்பாக ஒவ்வொரு துறைகளும் தங்களுக்கு தேவையான நிதி குறித்து மத்திய நிதியமைச்சகத்திடம் கோரிக்கை விடுக்கும். அந்த வகையில் 2021-22ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் சாலை மற்றும் நெடுஞ்சாலை துறைக்கு ரூ.1.40 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று அந்த துறை கோரிக்கை விடுத்துள்ளது.

பட்ஜெட்டில் எங்களுக்கு கொஞ்சம் அதிகமாக நிதி ஒதுக்குங்க.. சாலை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம்
நிதின் கட்கரி

கடந்த மத்திய பட்ஜெட்டின் போது மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலை துறை ரூ.1.16 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தது. ஆனால், மத்திய பட்ஜெட்டில் சுமார் ரூ.90 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது அதனை காட்டிலும் சுமார் ரூ.50 ஆயிரம் கோடி அதிகமாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலை துறை கோரியுள்ளது.

பட்ஜெட்டில் எங்களுக்கு கொஞ்சம் அதிகமாக நிதி ஒதுக்குங்க.. சாலை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம்
தேசிய நெடுஞ்சாலை

கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலை துறைக்கு கேட்ட தொகை கிடைக்காது என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட அளவுக்கே வரும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வாய்ப்புள்ளது. எதிர்வரும் மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் நிதியை, பாரத்மாலா, கடலோர சாலைகள், பொருளாதார சாலைகள் மற்றும் நெடுஞ்சாலை திட்டங்களுக்கு அந்த துறை பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.