நாளை மறுநாள் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்பிக்கள் கூட்டம்

 

நாளை மறுநாள் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்பிக்கள் கூட்டம்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

நாளை மறுநாள் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்பிக்கள் கூட்டம்

இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக முக ஸ்டாலின் தலைமையில் மக்களவை, மாநிலங்களை உறுப்பினர்கள் கூட்டம், 16.7.2021 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயம் ‘முரசொலி மாறன் வளாகத்தில்’ உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும்.

அதுபோது கழக மக்களவை- மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.