வரும் புதன்கிழமையன்று சிந்தியா உள்பட மாநிலங்களவைக்கு புதிதாக தேர்வான 61 எம்.பி.க்கள் பதவியேற்பு

 

வரும் புதன்கிழமையன்று சிந்தியா உள்பட மாநிலங்களவைக்கு புதிதாக தேர்வான 61 எம்.பி.க்கள் பதவியேற்பு

20 மாநிலங்களிலிருந்து நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு ஜோதிராதித்ய சிந்தியா உள்பட மொத்தம் 61 எம்.பி.க்கள் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்னும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவியேற்கவில்லை. இந்த சூழ்நிலையில் அடுத்த மாதம் 2 அல்லது 3 வாரத்தில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த கூட்டத்தொடரில் பங்கேற்க வேண்டுமானால் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் அதற்குள் பதவியேற்க வேண்டும். இந்நிலையில் புதிய மாநிலங்களவை எம்.பி.க்கள் வரும் 22ம் தேதியன்று (புதன்கிழமை) பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வரும் புதன்கிழமையன்று சிந்தியா உள்பட மாநிலங்களவைக்கு புதிதாக தேர்வான 61 எம்.பி.க்கள் பதவியேற்பு

மாநிலங்களவை தலைவர் எம். வெங்கையா நாயுடு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலங்களவை மற்றும் மக்களவை இரண்டின் துறை தொடர்பான நாடாளுமன்ற நிலை குழுக்கள் கூட்டங்கள் மீண்டும் தொடங்கப்படுவதையும், அந்த கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும் என மாநிலங்களவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் தங்களது விருப்பத்தை வெளிப்படுத்தியதையும் கருத்தில் கொண்டு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களின் பதவியேற்பு (சத்தியப்பிரமாண) விழாவை நடத்த மாநிலங்களவை தலைவர் எம். வெங்கையா நாயுடு முடிவு செய்துள்ளார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் புதன்கிழமையன்று சிந்தியா உள்பட மாநிலங்களவைக்கு புதிதாக தேர்வான 61 எம்.பி.க்கள் பதவியேற்பு

ஜூலை 22ம் தேதியன்று பதவியேற்பு விழா நடக்க இருப்பதை, மாநிலங்களவையின் புதிய எம்.பி.களுக்கு மாநிலங்களவை பொதுச்செயலாளர் தகவல் தெரிவித்தார். மேலும் அன்றைய தினம் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாதவர்களுக்கு எதிர்வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் போது பதவி பிரமாணம் செய்து வைக்கப்படும் என்ற தகவலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எம்.பி.களாக பதவியேற்ற பிறகே அவர்களால், நாடாளுமன்ற அவைகளின் நிலை குழுக்களின் கூட்டங்கள் மற்றும் நாடாளுமன்ற அவை நடவடிக்கைகளில் பங்கேற்க முடியும், சம்பளம் மற்றும் இதர பலன்களையும் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.