’புதிய கல்விக் கொள்கை தொலைநோக்கு பார்வை கொண்டது’ துணை ஜனாதிபதி மகிழ்ச்சி

 

’புதிய கல்விக் கொள்கை தொலைநோக்கு பார்வை கொண்டது’ துணை ஜனாதிபதி மகிழ்ச்சி

2017 ஆம் ஆண்டு இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் அமைக்கப்பட்ட கல்விக் குழு சென்ற ஆண்டு மத்திய அரசிடம் புதிய கல்விக் கொள்கை வரைவை அளித்தது.

அக்கொள்கை வரைவில் உள்ள பல்வேறு அம்சங்களைச் சுட்டிக்காட்டி தமிழகத்தின் பெரும்பான்மையான கட்சிகளும் கல்வி செயற்பாட்டாளர்களும் எதிர்த்தனர். இந்நிலையில் நேற்று முதன்நாள் இக்கல்விக் கொள்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இனி அடுத்துள்ள விஷயம், ஜனாதிபதியின் ஒப்புதல் அதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது.

’புதிய கல்விக் கொள்கை தொலைநோக்கு பார்வை கொண்டது’ துணை ஜனாதிபதி மகிழ்ச்சி

மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் குடியரசுத் துணைத் தலைவர் எம். வெங்கய்ய நாயுடுவை, அவருடைய மாளிகையில் சந்தித்தார். அரசு அறிவித்த புதிய கல்விக்கொள்கை -2020 பற்றிய தகவல்களை குடியரசுத் துணைத் தலைவரிடம் அவர் தெரிவித்தார். கொள்கை விவரங்கள் அடங்கிய நகல் ஒன்றையும் அமைச்சர் அளித்தார். புதிய கல்விக் கொள்கையின் சிறப்பம்சங்கள் பற்றிய குறிப்பு ஒன்றையும் குடியரசுத் துணைத் தலைவரிடம் அவர் அளித்தார்.

தொலைநோக்கு சிந்தனையுடன் கூடிய இந்தக் கொள்கை குறித்து குடியரசுத் துணைத் தலைவர் மகிழ்ச்சி தெரிவித்தார். பள்ளி செல்லும் பிள்ளைகள் மற்றும் இளைஞர்கள் அனைவருக்கும் தரமான கல்வி கிடைப்பதற்கான வசதியை மேம்படுத்தும் வகையில், இது முக்கியமான நடவடிக்கையாக இருக்கும் என்று குடியரசுத் துணைத் தலைவர் குறிப்பிட்டார்.

’புதிய கல்விக் கொள்கை தொலைநோக்கு பார்வை கொண்டது’ துணை ஜனாதிபதி மகிழ்ச்சி

புதிய கல்விக் கொள்கை – 2020 தொலைநோக்கு பார்வை கொண்டது எனக் குறிப்பிட்டுள்ள அவர், இது உண்மையான உலகளாவிய சூழ்நிலைக்குப் பொருத்தமானது என குறிப்பிட்டுள்ளார். உலகெங்கும் இருந்து மதிக்கப்படும் சிந்தனைகளை இந்தியா வரவேற்கும் என்ற பாரம்பரியத்தை நிரூபிப்பதாக இது உள்ளது என்றும் எந்த மொழியும் திணிக்கப்படவோ, எதிர்க்கப்படவோ கூடாது என்ற தன்னுடைய எண்ணம் இந்த புதிய கல்விக் கொள்கையில் பிரதிபலிக்கிறது என்று குடியரசு துணைத் தலைவர் திருப்தி தெரிவித்தார்.

மத்திய அரசின் இந்த நடவடிக்கை மூலம் மிக விரைவில் புதிய கல்விக் கொள்கை திட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைக்கும் என்று தெரிகிறது. அப்படிக் கிடைக்கும்பட்சத்தில் உடனடியாக நாடு முழுக்க புதிய கல்விக் கொள்கை திட்டம் அமல் செய்யப்படும் என செய்திகள் தெரிவிக்கின்றன.