பெண்ணை வன்கொடுமை செய்த வாலிபன் -வழக்கு போட காவல்நிலையத்தில் கால்கடுக்க நிற்கும் தாய் -அலட்சியப்படுத்தும் அதிகாரிகள்..

 

பெண்ணை வன்கொடுமை செய்த வாலிபன் -வழக்கு போட காவல்நிலையத்தில் கால்கடுக்க நிற்கும் தாய் -அலட்சியப்படுத்தும் அதிகாரிகள்..

ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவின் மகளிர் காவல் நிலையத்தில் ஒரு 18 வயது பெண்ணும் அவரின் தாயும் பல நாட்களாக அந்த காவல் நிலையத்தின் வாசலில் காத்திருக்கிறார்கள் .என்ன காரணமென்றால் அந்த 18 வயது பெண்ணை அந்த பகுதியை சேர்ந்த ஒரு 22 வயது வாலிபன் தெருவில் தண்ணீர் பிடிக்கும்போது மான பங்க படுத்திவிட்டான்.இதனால் அந்த பெண் அழுதுகொண்டே வந்து அந்த வாலிபன் செய்த செயலை தன்னுடைய தாயாரிடம் கூறினார் .

பெண்ணை வன்கொடுமை செய்த வாலிபன் -வழக்கு போட காவல்நிலையத்தில் கால்கடுக்க நிற்கும் தாய் -அலட்சியப்படுத்தும் அதிகாரிகள்..உடனே அந்த தாய் தன்னுடைய மகளை அழைத்துக்கொண்டு நேராக அருகேயுள்ள காவல் நிலையத்திற்கு சென்று புகாரளிக்க போனார் .ஆனால் அங்கிருந்த காவல்துறை அதிகாரிகள் அந்த தாயிடம் ,இதற்கெல்லாம் எதற்கு வழக்கு போடுகிறீரகள் என்று கேட்டு அந்த வாலிபரிடம் சமாதானமாக போவதற்கு கையெழுத்து வாங்கியுள்ளார்கள் .சரியாக எழுத படிக்க தெரியாத அந்த தாய் அந்த பேப்பரில் என்ன எழுதியிருக்கிறதென்று தெரியாமலே கையெழுத்து போட்டு விட்டு வந்துள்ளார் .

பெண்ணை வன்கொடுமை செய்த வாலிபன் -வழக்கு போட காவல்நிலையத்தில் கால்கடுக்க நிற்கும் தாய் -அலட்சியப்படுத்தும் அதிகாரிகள்..பிறகு சில நாள் கழித்து அங்கிருக்கும் மகளிர் காவல் நிலையத்தை அணுகியபோது, அங்கிருந்த பெண் அதிகாரி ,இதற்கெல்லாம் வழக்குப்போட்டு அந்த வாலிபரின் வாழ்க்கையை ஏன் வீணாக்குகிறீர்கள் என்று கேட்டு , மேலும் அவன் பிரச்சினை செய்தால் என்னை கூப்பிடுங்கள் என்று கூறி, அவரின் போன் நம்பரை கொடுத்து அனுப்பியுள்ளார் .
இதனால் கடும் மனஉளைச்சலுக்குள்ளான அந்த தாய் ,என் மகளை மானபங்க படுத்தியவன் மீது இந்த நாட்டில் ஒரு வழக்கு கூட போட முடியவில்லையே என்றும் ,நிர்பயா வழக்குக்கு பிறகு பாலியல் சட்டத்தை கடுமையாக்கியுள்ளதாக கூறுவது வெறும் கற்பனைதானா என்றும் புலம்பியவாறு இருக்கிறார்.