ஊசிமணி, பாசிமணி விற்ற நரிக்குறவர்கள் இனி தொழில்முனைவோர்!

ஊசிமணி, பாசிமணி விற்ற நரிக்குறவர்கள் இனி தொழில்முனைவோர்!

கொரோனா ஊரடங்கில் உணவு சம்பந்தப்பட்ட உற்பத்தியாளர்கள் மட்டும் தப்பித்துக்கொண்டனர். மற்ற தொழிலதிபர்களின், தொழிலாளர்களின் பாடு படு திண்டாட்டமாகிவிட்டது. பலரும் இழந்த வாழ்வாதாரத்தினை இன்னமும் மீட்க முடியாமல் தவிக்கின்றனர். ரயில், பஸ்களில் ஊசிமணி விற்றுக்கொண்டிருந்த நரிக்குறவர்கள், ரயில், பஸ் இல்லாததால் வாழ்வாதாரத்தை முற்றிலுமாக இழந்து தவித்து வந்தனர்.

ஊசிமணி, பாசிமணி விற்ற நரிக்குறவர்கள் இனி தொழில்முனைவோர்!

தளர்வுகளால் தற்போது வேலைவாய்ப்புகள் இருந்தாலும் இன்னமும் சகஜ நிலை இல்லாமல் இருக்கிறது. இதில், நரிக்குறவர்களின் நிலையும் இதுதான். இந்நிலையில், வாழ்வாதாரம் இழந்து தவிக்கு நரிக்குறவர்களின் வாழ்க்கை தரத்தினையே மாற்ற முன்வந்திருக்கிறார் நெல்லை ஆட்சியர் ஷில்பா பிரபாகர சதீஷ்.

ஊசிமணி, பாசிமணி விற்ற நரிக்குறவர்கள் இனி தொழில்முனைவோர்!

மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலமாக, வீட்டுக்கு தேவையான பினாயில், சோப்பு, சானிடைசர், வாசிங் பவுடன் போன்றவற்றை தயாரிப்பது எப்படி என்பதை நரிக்குறவர் பெண்களுக்கு கற்றுக்கொடுத்து, அவர்களும் அவற்றை தயார் செய்து விற்க ஏற்பாடுகள் செய்திருக்கிறார். குறுகிய கால பயிற்சியாக ஏழே நாட்களின் பயிற்சி பெற்று நரிக்குறவ பெண்களும் வீட்டுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை தயாரித்திருக்கிறார்கள்.

ஊசிமணி, பாசிமணி விற்ற நரிக்குறவர்கள் இனி தொழில்முனைவோர்!

இவற்றை விற்பனை செய்ய நெல்லை ஆட்சிய அலுவலகத்திலேயே இடமும் ஒதுக்கி தந்திருக்கிறார் ஆட்சியர்.