அதிரடி காட்டிய ஸ்டாலின்… அமைச்சர்களுக்கு கொடுத்த அட்வைஸ்!

 

அதிரடி காட்டிய ஸ்டாலின்… அமைச்சர்களுக்கு கொடுத்த அட்வைஸ்!

முழு பொதுமுடக்கத்தை முறையாக அமல்படுத்துவதை உறுதிசெய்யவேண்டும் என அமைச்சர்களுக்கு மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

அதிரடி காட்டிய ஸ்டாலின்… அமைச்சர்களுக்கு கொடுத்த அட்வைஸ்!

தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. காலை 11.30 மணிக்கு தொடங்கிய அமைச்சரவை கூட்டம் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக நடந்தது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் 6 முடிவுகள் எடுக்கப்பட்டன. இதில் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு உடனே சிகிச்சை அளிப்பதே கண்காணிக்க வேண்டும். முழு ஊரடங்கு முறையாக அமல்படுத்துவதில் உறுதிப்படுத்த வேண்டும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ள நிலையில் ஊரடங்கு முறையாக அமல்படுத்தப்பட்டால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதிரடி காட்டிய ஸ்டாலின்… அமைச்சர்களுக்கு கொடுத்த அட்வைஸ்!

மருத்துவர்கள் செவிலியர்கள் நோயாளிகளுக்கு தரமான உணவு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எவ்விதமான சூழ்நிலையிலும் ஆக்சிஜன் வீண் போகக் கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் மருத்துவமனைகளில் முறையாக ஆக்சிஜன் பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். ரெம்டெசிவர் மருந்து கள்ள சந்தையில் விற்பனையாவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார். அதேபோல் கொரோனா தடுப்பூசி குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் , மருத்துவம், வருவாய், காவல் உள்ளிட்ட துறைகள் இணைந்து செயல்பட வேண்டும் என்று கூறியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் ஆய்வுக் கூட்டங்களை நடத்தி அனைவரும் இணைந்து செயல்படுவது உதவி செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.