Home ஆன்மிகம் சூரிய பகவானை வணங்குவதால் ஏற்படும் அதிசயம்!

சூரிய பகவானை வணங்குவதால் ஏற்படும் அதிசயம்!

சூரிய பகவானுக்கு உடைய ஆவணி ஞாயிற்றுகிழமை சூரிய பகவானை வழிபட்டால், எதிரிகள் தொல்லை நீங்கி நினைத்த காரியத்தை வெற்றியுடன் அடைமுடியும் என புராணங்கள் சொல்கின்றன. சூரியனை போற்றி வழிபடும் ஸ்லோகமான ஆதித்ய ஹரிதயம் சூரியனின் பெருமைகளை சொல்லற்கரியது.

இந்த ஆதித்ய ஹரிதயம் படிப்பதால் எதிரிகள் தொல்லை அறவே நீங்கும். அரசாங்க காரியங்கள் தடை இன்றி நடக்கும். தொடர்ந்து, ஆதித்ய ஹரிதயம் ஸ்லோகத்தை சொல்லிவந்தால் எண்ணற்ற பயன்களை பெறலாம் என்று நம் முன்னோர்கள் காலம் காலமாக கூறி வருகின்றனர்.

சூரியனை வணங்குவதால் ஏற்படும் அற்புத பலன்கள் !!

ஜாதகத்தில் சூரியன் நீச்சம் பெற்றிருப்பவர்கள் சூரியன் பலம் இழந்து இருப்பவர்கள் தினமும் ஆதித்ய ஹரிதாயத்தை படித்தால் சூரியனால் வரும் தோஷத்தில் இருந்து விடுபடலாம்.

சூரியபகவான் மட்டுமே நம்முடைய கண்களுக்கு தெளிவாக தெரியும் தெய்வமாவார். அதனால் அவரை வணங்குவது அதிக சிறப்பை தரும். சூரிய பகவானின் அருளை பெரும் பல வழிகளில் இந்த ஆதித்ய ஹரிதாயத்தை படிப்பதும் ஒன்றாகும்.

சூரிய பகவான் குறித்த அற்புதத் தகவல்களை பற்றி அறிவோம் || Surya Dev


யுத்த களத்தில் இராமருக்கு உதவிய சூரிய துதி:-

இராமாயணத்தில் சீதாப்பிராட்டியை இராவணிடம் இருந்து மீட்க யுத்தம் நடந்தபோது, இராமனும் இராவணனும் யுத்தகளத்தில் சம பலம் கொண்டவர்களாக கடும் யுத்தத்தில் ஈடுபட்டனர். -வித்யாராஜா
இராமன் எவ்வளவோ முயன்றும் இராவணனை கொல்ல முடியாமல் தடுமாறுகிறார். அப்போது இராவணனை கொல்வதற்கு என்ன வழி என்று தெரியாமல் தவித்த போது அகத்திய முனிவர் அவர் முன்னே தோன்றி ஒரு வழியை சொல்கிறார்.

அவர், இராமனின் முன் நின்றவாறு ஆதித்ய ஹரிதாயம் எனும் மந்திரத்தை உபதேசிக்கிறார். சூரியனை குறித்த இந்த துதி விஷேஷ மந்திரங்கள் அடங்கியது. இந்த துதியை இராமபிரான் போர்க்களத்திலேயே முறையாக அமர்ந்து ஆசமனம் செய்து மூன்று முறை மன ஒருமைப்பாட்டுடன் ஓதி விட்டு பிறகு தன் யுத்தத்தை தொடர்கிறார்.

சூரிய பகவான் குறித்த அற்புதத் தகவல்களை பற்றி அறிவோம்....! | Webdunia Tamil

அப்போது, இராமன் வழக்கமாக குறி வைக்கும் இடத்தை மாற்றி இராவணனின் நாபி பகுதியை நோக்கி அம்பை எய்கிறார். அது அதிவேகமாக சென்று இராவணனின் உயிரை எடுத்து வந்தது. பிறகு 10 பாணங்களால் 10 தலைகளையும் 20 பாணங்களால் இருபது கைகளையும் ராமன் அறுத்து வீழ்த்துகிறார்.

31 பானங்களில் இராவணனை ராமன் முழுவதுமாக கொல்கிறார். தொடர்ச்சியாக ஆயிரக்கணக்கான பானங்களை எய்தும் கொள்ள முடியாத இராவணனை இராமன் இறுதியில் 31 பானங்களை கொண்டு அளித்ததற்கு ஆதித்ய ஹ்ரித்யம் அளித்த ஆற்றலும் புத்தியுமே காரணம் என துளசி தாசர் தன்னுடைய இராமா சரிதத்தில் அழகாக விவரித்திருப்பர்.
அப்படிப்பட்ட சூரிய பகவானை வணங்க, ஆவணி ஞாயிறு அற்புதமான நாளாக திகழ்கிறது.

மாவட்ட செய்திகள்

Most Popular

9 ஆண்களுக்கு தூக்கு; 4 பெண்களுக்கு ஆயுள்: ஒரே குடும்பத்தினருக்கு ஏன் இந்த தண்டனை?

ஒன்பது ஆண்கள் தூக்கு தண்டனையும், 4 பெண்களுக்கு ஆயுள் தண்டையையும் விதித்து தீர்ப்பளித்திருக்கிறது பீகார் நீதிமன்றம். ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேருக்கு விதிக்கப்பட்டிருக்கும் இந்த தீர்ப்பு நாடெங்கிலும் பரபரப்பை...

“ஸ்டாலினை எதிர்த்து கமல் போட்டி” சுத்தமான இடத்தில் நிற்பேன் என நக்கல்!

மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் ஹாசன் அம்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் நாய் ஜாக்கிரதை என்று போர்டு வைப்பதுபோல...

ஒருத்தன் கத்தியை காமிச்சான் -இன்னொருத்தன் துப்பாக்கியை காமிச்சான் -இன்ஸ்பெக்டர் மனைவிக்கே நடந்த கொடுமை .

தனியே வந்த ஒரு இன்ஸ்பெக்டரின் மனைவியிடம் துப்பாக்கியை காமித்து பணத்தை கொள்ளையடித்தவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்

“தமிழகத்தில் பாஜக கால் பதிக்கக் கூடாது; அதிமுக கூட்டணி வெற்றி பெறக் கூடாது”

தமிழகத்தில் பாஜக கால்பதிக்க கூடாது, அதிமுக கூட்டணி வெற்றி பெறக்கூடாது என்ற நோக்கத்தில் திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளோம் என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
TopTamilNews