தமிழகத்தில் நீலகிரி உள்பட 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு !

தமிழகத்தில் நீலகிரி உள்பட 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு !

தென் மேற்கு பருவமழை மற்றும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நீலகிரி உள்பட 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு !

திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி மாவட்டத்தில் கனமழையும் பெய்யும் என தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நீலகிரி உள்பட 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு !

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளது.

தமிழகத்தில் நீலகிரி உள்பட 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு !

ஏற்கனவே நீலகிரியில் கனமழை காரணமாக அங்கு நிலச்சரிவு ஏற்பட்டு 48 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மண்ணில் புதையுண்ட மற்றவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. அந்த வகையில் மீண்டும் நீலகிரியில் கனமழை பெய்யும் என்பது அப்பகுதி வாசிகள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.