சேலம் சுற்றுவட்டாரப் பகுதியில் 100க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் மாஸ்டர் திரைப்படத்தை வெளியிட முடிவு

 

சேலம் சுற்றுவட்டாரப் பகுதியில் 100க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் மாஸ்டர் திரைப்படத்தை வெளியிட முடிவு

சேலம் விநியோகப் பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் மாஸ்டர் திரைப்படத்தை வெளியிட திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படத்தை பொங்கல் பண்டிகைக்கு வெளியிட தயாரிப்பாளர் லலித்குமார் திட்டமிட்டிருக்கிறார். பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை 1000 திரையரங்குகளில் வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

சேலம் சுற்றுவட்டாரப் பகுதியில் 100க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் மாஸ்டர் திரைப்படத்தை வெளியிட முடிவு

இந்த நிலையில் சேலம் விநியோக பகுதியில் உள்ள 90% திரையரங்குகளில் மாஸ்டர் படத்தைத் திரையிட விநியோகஸ்தர்களும் திரையரங்கு உரிமையாளர்களும் முடிவு செய்துள்ளனர். திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் என்று மத்திய. மாநில அரசுகளிடம் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மத்திய மாநில அரசுகள் பல தொழில்களுக்கு முழுமையான தளர்வு வழங்கியுள்ளன. இறுதியாக பேருந்துகளும் 100 சதவீத பயணிகள் பயணிக்கலாம் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் திரையரங்குகளிலும் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் என்று திரையரங்க உரிமையாளர் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.