மார்ச் மாத பஸ் பாஸை செப்டம்பரில் பயன்படுத்தலாம்!

 

மார்ச் மாத பஸ் பாஸை செப்டம்பரில்  பயன்படுத்தலாம்!

சென்னையில் மார்ச் மாத பஸ் பாஸை இந்த மாதம் 15ஆம் தேதி வரை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

கொரோனா காரணமாக ஊரடங்கு அமலில் இருந்ததால் பொது போக்குவரத்து கடந்த 5 மாத காலமாக நிறுத்தப்பட்டிருந்தன. தற்போது ஊரடங்கு முடிவுக்கு வந்துள்ள நிலையில் 161 நாட்களுக்கு பின் மீண்டும் பொது போக்குவரத்தை அரசு துவக்கியுள்ளது. இதனால் மக்கள் ஆர்வமுடன் பேருந்துகளில் பயணிக்க தொடங்கியுள்ளனர்.

மார்ச் மாத பஸ் பாஸை செப்டம்பரில்  பயன்படுத்தலாம்!

இந்நிலையில் சென்னை மாநகர பேருந்தில் மார்ச் மாதம் எடுத்த ஆயிரம் ரூபாய் பாஸ் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மார்ச் மாதம் எடுத்த பாஸ் ஒரு வாரம் மட்டுமே பயன்படுத்தி இருப்பதால் தற்போது அனுமதி
செப்டம்பர் 15 வரை பயன்படுத்திக் கொள்ளலாம் என போக்குவரத்து துறை தகவல் தெரிவித்துள்ளது.

மார்ச் மாத பஸ் பாஸை செப்டம்பரில்  பயன்படுத்தலாம்!

பொது போக்குவரத்து பல மாதங்களுக்கு பிறகு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் பஸ் பாஸ் பெறமக்கள் ஒரே நேரத்தில் கூடினால் கட்டுபாட்டு வழிமுறைகளில் சிக்கல் ஏற்படும். மேலும் வருவாயை இழந்து தவிக்கும் மக்கள் ஏற்கனவே எடுத்த மார்ச் மாத பாஸ் ஒருவாரம் மட்டுமே பயன்படுத்தினால் இந்த தளர்வு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.