கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள 5 மாநிலங்களிலிருந்து ரயில், விமான சேவை நிறுத்துங்க.. மம்தா பானர்ஜி

கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள 5 மாநிலங்களிலிருந்து ரயில், விமான சேவை நிறுத்துங்க.. மம்தா பானர்ஜி

தொற்று நோயான கொரோனா வைரஸ் நம் நாட்டில் தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையிலும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கிறது. இதனால் ஆகஸ்ட் 12ம் தேதி வரை ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள 5 மாநிலங்களிலிருந்து ரயில், விமான சேவை நிறுத்துங்க.. மம்தா பானர்ஜி

இந்த சூழ்நிலையில், மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு, நம் நாட்டில் கொரேனா வைரஸால் மோசமாக பாதிக்கப்பட்ட (பாதித்தவர்கள் எண்ணிக்கை) டாப் 5 மாநிலங்களிலிருந்து மேற்கு வங்கத்துக்கு ரயில்களை அனுப்ப வேண்டாம் என மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. இது தொடர்பாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள 5 மாநிலங்களிலிருந்து ரயில், விமான சேவை நிறுத்துங்க.. மம்தா பானர்ஜி

5 மாநிலங்களிலிருந்து ரயில்களை மேற்கு வங்கத்துக்கு அனுப்புவதை உடனடியாக நிறுத்தும்படி மத்திய அரசுக்கு தலைமை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். கொரோனா வைரஸ் ஹாட்ஸ்பாட்டாக உள்ள 5 மாநிலங்களிலிருந்து விமானங்களை மேற்கு வங்கத்துக்கு அனுப்ப வேண்டாம். அதேபோல் மற்ற மாநிலங்களிலிருந்தும் வாரத்துக்கு ஒருநாள் மட்டும் விமான சேவையை இயக்கினால் போதும் என மத்திய அரசை மாநில அரசு வலியுறுத்தியுள்ளது. கொல்கத்தா மெட்ரோ ரயில் சேவைகளை மீண்டும் தொடங்குவதற்கு முன் ரயில், சுகாதாரம் மற்றும் உள்துறை ஆகிய மத்திய அமைச்சகங்களின் அனுமதி பெற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.